மார்கழி மாதம் தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் அபிஷேகம் நடை பெறும். திருவெம்பாவை பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான இன்று திருவாதிரைத் திருநாளில் நடராஜர் திருக்கூத்தும், வீதி உலா நடைபெறுவது வழமை.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம் என்ற சிவபெருமானின் ஆனந்த திருநடன நன்னாள் ஆகும். நடராசருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறுவது வழமை. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்திலும், இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள சிதம்பரத்திலும் மார்கழித் திருவாதிரை மிகச் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.