மறைந்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (16), ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சு. சுதாகரன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் ச. சர்வானந்தன் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சிவாஜிலிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
கடந்த 14ஆம் திகதி காலமான சிவாஜிலிங்கத்தின் தமிழ்த் தேசிய அரசியல் பங்களிப்புகளையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.