திருகோணமலை துறைமுகத்தில் முதன்முறையாக 3 கப்பல்கள் நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2026 (திங்கட்கிழமை)
முதல் முறையாக, திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரஃப் ஜெற்றி (Ashroff jetty) முனையத்தில் ஒரே நேரத்தில் மூன்று கப்பல்களின் சரக்கு கையாளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் மூலம் ரூ. 300 மில்லியனைத் தாண்டிய வருமானம் கிடைக்கும் என திருகோணமலை துறைமுகத்தின் Resident Manager சரத் குமார தெரிவித்தார்.
மன்னார் காற்றாலை மின்சக்தித் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட ஐந்து காற்றாலை கோபுரங்களை ஏற்றிய AAL BANGKOK கப்பலின் சரக்கு இறக்குதல் நடவடிக்கைகள் ஜெட்டியின் ஒரு தரிப்பிடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, மீள்ஏற்றுமதி நோக்கத்திற்காக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 17,000 மெட்ரிக் தொன் இரும்பு கட்டுமான கம்பிகளை கையாளுவதற்காக HAI LONG 1 கப்பல் துபாயிலிருந்து வருகை தந்துள்ளது.
இதனிடையே, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் பயன்பாட்டிற்காக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை UNIWELL கப்பல் தற்போது இறக்கி வருகிறது.
திருகோணமலை துறைமுகத்தில் ஒரே நேரத்தில் மூன்று கப்பல்களின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது, துறைமுகத்தின் செயற்பாட்டு திறனையும் வருவாய் ஈட்டும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.