புயலுக்கு மோறா (Mora) எனப் பெயர், பங்காளதேசத்தை தாக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 4 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து புயலாக மாறி (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் (chittagong) துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது.
இந்தப் புயலுக்கு மோறா (Mora) எனப் பெயர் இடப்பட்டுள்ளது. Mora என்பது வட இந்தியாவில் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு வழங்ககப்ப்டும் பெயர் ஆகும்.
கடந்த வருடம் இதே பகுதியில் உருவாகி தமிழகத்தின் சென்னையைத் தாகியிருந்த புயலுக்கு 'வர்தா' என பெண்ணின் பெயர் சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புயலினால் யாழ் தீபகற்பத்திற்கு நேரடிப் பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்றாலும், கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் கடலும் கொந்தளிப்பாக இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
கீழே படத்தில் புயலின் நகர்வின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்
1) பருத்தித்துறைக்கு வட கிழக்காக வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.