வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாழமுக்கமாக உருவாக்கி பின்னர் புயலாக மாறி மேற்குத் தியில் நகர்ந்துவரும் வர்தா புயல் இன்று பிற்பகல் தமிழகத்தின் வடபகுதி கரையை தாக்கவுள்ளது.
இலங்கை இந்தியா காலை நேரம் 6 மணியளவில் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் சுமார் 85 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டு தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து வரும் வர்தா புயல் இன்று பிற்பகல் தமிழகத்தின் துறைமுகப்பகுதிகளான சென்னை, எண்ணூர் பகுதிகளை அண்டி தாக்கவுள்ளது.
1994ஆம் ஆண்டிற்கு பின்னர் சென்னையை தாக்கவுள்ள அதிதீவிர புயலாக வர்தா புயல் கருதப்படுகிறது. தற்பொழுது மணிக்கு சுமார் 12 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்துவரும் வர்தா புயல் 90 Km வேகத்தில் காற்றை உருவாக்கி வருகிறது.
வர்தா புயலால் தற்பொழுது சென்னை உள்பட பல இடங்களில் கனத்த மழை பெய்து வருகின்றது.
கீழே படத்தில் குறித்த புயலின் தற்போதைய செய்மதிப்படம் காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.