உடுப்பிட்டி பட்டப்போட்டியில் உயரப் பறந்து வென்ற பிராந்துப் பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)
தைப்பொங்கலை முன்னிட்டு இடம்பெறும் உடுப்பிட்டி பட்டப் போட்டி நேற்று முன்தினம் 14.01.2017 சனிக்கிழமை மதியமளவில் வல்லை கட்டுவன் திடலில் இடம்பெற்றது.
இப்போட்டியில் பல வர்ண நிறமுடைய சுமார் ஒரு மீட்டருக்கும் உயரமான பிராந்துப் பட்டங்கள் பல பறக்க விடப்பட்டு இருந்தன.
அதில் உயரமாக பறக்க விடப்பட்ட பட்டங்களில் நடுவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் மூன்று பட்டங்களில் முதலாவது பட்டத்துக்கு 7000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாவது பட்டத்துக்கு 5000 ரூபாய் பணப் பரிசும், மூன்றாவது பட்டத்துக்கு 3000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஏனைய 5 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. முதலாவது பரிசினை திரு. ஜெசிதரன் பெற்றுக் கொண்டார்.
பட்டப் போட்டிகளில் வருடக் கணக்காக பங்கேற்று நன்கு அனுபவம் வாய்ந்தவரான திரு. தேவதாஸ் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பணப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
வெளிநாடு வாழ் உடுப்பிட்டி மக்களின் ஆதரவில் வருடா வருடம் இடம்பெறும் இப்பட்டப் போட்டியில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.