ஊரணி வைத்தியசாலைக்கு உதவி - 73 நண்பர்கள் அறிக்கை(படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2022 (புதன்கிழமை)
எமை வளர்த்த ஊரை நாம் வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு பணவுதவி செய்த உறவுகளும், அப்பணத்தை தமது நாடுகளில் சிரமம் பாராமல் ஒன்றாகச் சேர்த்து அதை நாட்டுக்கு அனுப்பி வைத்த ஏழு நாடுகளிலுமுள்ள நட்புகளும், இலங்கையிலிருந்து அப்பணத்தையெல்லாம் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் ஒன்றாகச் சேர்த்து அதை வைத்தியசாலை நிரவாகத்தின் ஆலோசனையுடன் அவர்களிடம் சேர்த்த உறவும் இல்லாமலிருந்தால் இப்பெரும் பணி நடந்திருக்க சாத்தியமே இல்லை. ‘நன்றி’ என்ற வார்த்தை நாம் நட்புகள் எனும் காரணத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
சிறிய நேர இடைவெளியில் பெரிய உதவியினை எதுவித ஆரவாரமுமின்றி சரியாக ஒருங்கிணைத்து அடக்கமாக செய்து முடித்து அதை உரியவர்களின் கைகளில் உணர்வுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக எமக்குள் உள்ள ஒற்றுமையை இச்செயல் பறைசாற்றி நிற்கின்றது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் கூற்றின்படி வைத்தியசாலையில் ஒவ்வொருமாதமும் 10,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான அடிப்படை தேவையான CCTV என்பது இல்லாமல் இருப்பது ஒர் குறையாக இருந்துகொண்டே வருகின்றது. இதனால் பல நடைமுறைப் பிரச்சனகளை வைத்தியசாலை நிர்வாகம் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதை நிவர்த்தி செய்வது இதுவரை இயலாத ஓர் விடயமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் எம்மால் வழங்கப்பட்ட பணவுதவி மூலம் நாம் வைத்தியசாலைக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளுக்கான உதவியையும் செய்து அவர்களது எதிர்கால பாதுகாப்புக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளோம் என்பதை எண்ணும் போது மிகவும் வலிமையாக உணர்கின்றோம். இச்செயல் மூலம் எமது வல்வை 73 குடும்பம் எமது வைத்தியசாலையுடனான உறவை முத்திரை பதித்து, என்றும் நினைவில் வைத்திருக்கும் வகையான ஓர் ஆக்கபூர்வ செயலைச் செய்ய விளைகின்றோம். நாம் முன்னதாகவே இது சம்பந்தமாக விபரித்திருந்தோம்.
இதுசம்பந்தமாக இரு நிறுவனங்களிடமிருந்து மேற்கோள்கள் பெறப்பட்டுள்ளன. அதை இலங்கையிலுள்ள எமது நட்பு பாலராஜன் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பெற்றுள்ளார்.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ட பணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு நாங்கள்தான் கடமைப்பட்டுள்ளோம்.
அந்தக் கடமையையும் செவ்வனே செய்து எமது வரலாற்றுப் பயணத்தைத் தொடருவோமாக! உங்கள் எண்ணங்களை வண்ணமாக வரையுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.