வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வும், யாழில் வருடந்தோறும் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளில் ஒன்றுமான மாபெரும் இந்திரா விழா 2026 நேற்று மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.
விழாவையொட்டி ஊரணி முதல் ஊரிக்காடு வரையான பருத்தித்துறை – தொண்டைமானாறு வீதி மற்றும் கடற்கரைகளின் சில பகுதிகளும் மின் விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரமாண்ட கட் அவுட்டுக்கள் ஆங்காங்க வைக்கப்பட்டிருந்தன.
பார்வையாளர்களை கவரும் வண்ணம் பல இடங்களில் மேடை நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள் அதிகாலை வர இடம்பெற்றன.
பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் வியாபாரங்களும் களை கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இந்திரவிழா இடம்பெறும் பிரதான பகுதியான நெடியகாட்டு பிள்ளையார் கோவில் பாலஸ்தானம் இடம்பெறவுள்ளதால் அடுத்த வருடம் இந்திரா விழா இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.