கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வல்வை றெயின்போ மைதானத்தில் வல்வையின் இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்குமிடையே 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றிருந்தது.
நாணயசுழற்சியில் இந்நாள், முன்னாள் அணித்தலைவர்கள்
அன்றைய நாள் வேகப்பந்து வீச்சாளர் சூட்டா
இன்னுமோர் பழைய வேகப்பந்து வீச்சாளர் பிரபு
முன்னாள் வீரர்களின் பந்துவீச்சில் திணறும் இந்நாள் நட்சத்திரம் ஜெகன்
டைவ் அடுத்து பந்தை தடுத்த குணநாதன்
இதில் இந்நாள் வீரர்கள் சார்பாக கப்டன் பிரகலாதன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளமுடியாமையால் பிரணவன் கப்டனாக செயற்பட்டார். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற முன்னாள் வீரர்களின் கப்டன் முருகவேல் இந்நாள் வீரர்கள் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
முன்னாள் வீரர் முருகவேல்
களத்தடுப்பில் புலியாக சிறீ
இளம் புயல் ஜிவிந்தன்
அதற்கமைய இந்நாள் வீரர்கள் சார்பாக அதிரடி வீரர் சிம்புவும், விஜேயேந்திரனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். முன்னாள் வீரர்கள் சார்பாக வல்வை அணியின் வேகப்பந்து வீச்சு நட்சத்திரங்களான சூட்டாவும், வினோபாவும் பந்து வீசினர். முதலாவது ஓவரில் ஒரு சிக்ஸ், அடுத்த ஓவரில் முன்னாள் வீரர் பிரபு புண்ணியத்தில் தப்பிபிழைத்த சிம்பு அடுத்த பந்தில் வினோபாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் 11 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். வினோபாவின் அடுத்த ஓவரில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விஜேயேந்திரனும் 2 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.
இந்நாள் அணியின் தூண் பிரணவன்
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டைசன்
முன்னாள் சகலதுறை வீரர் கிருஷ்ணமேனன்
பின்னர் களமிறங்கிய இந்நாள் அணியின் நம்பிக்கை நட்சத்திம் ஜெகனும், இளம்புயல் ஜிவிந்தனும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி சென்றனர். பின்னர் பந்துவீசவந்த செந்தில், பிரபு ஆகியோர் ஓரளவு கட்டுகோப்பாக பந்து வீசினர். பின்னர் 9வது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் முருகவேலின் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரம் ஜெகன் 15 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். பின்னர் அடுத்த முருகவேலின் ஓவரில் முதற்பந்தில் சிக்சர் அடித்து வாணவேடிக்கை காட்டிய இளம்புயல் ஜிவிந்தன் அடுத்த பந்தில் 34 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.
முன்னாள் அணி தொடக்க வீரர் முருகவேல்
முன்னாள் வீரர் பிரபு
முன்னாள் வீரர் செந்தில்
இளம்புயல் ஜிவிந்தன்
பின்னர் களம்புகுந்த அணியின் தூணும் இன்றைய போட்டியின் கப்டனுமாகிய பிரணவனே அணியை தூக்கி நிறுத்தினார். இறுதி ஓவரில் ஆட்டமிழந்த இவர் 29 பந்துகளை எதிர்கொண்டு 49 ஓட்டங்களை பெற்றிருந்தார். 7வதாக களமிறங்கிய ரவியும் அப்ரிடி போல் அதிரடியாக ஆடி ஒற்றைக்கையால் பெறப்பட்ட சிக்சர் உட்பட 24 ஓட்டங்களை பெற்றிருந்தார். 8வதாக வந்த வளர்ந்து வரும் வீரரான பிரசாந்தும் அதிரடியாக 5 பந்துயளில் 15 ஓட்டங்களை பெற்றிருந்தார். 20 ஓவர் முடிவில் இந்நாள் வீரர்கள் 8 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
கட்டை போடும் முன்னாள் வீரர் சூட்டா
முன்னாள் வீரர் வினோபா
மேற்படி இந்நாள் வீரர்களினது இன்னிங்சில் ஆட்டமிழந்த 8 வீரர்களில் 7 பேர் போல்ட் முறையில் ஆட்டமிழந்திருந்தனர். முன்னாள் வீரர்கள் சார்பாக வினோபா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். முன்னாள் வீரர்கள் வயது போயிருந்தாலும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்று டைவ் அடித்து அபாராமாக பந்தை தடுத்து குணநாதன், கிட்டு, சிறீ களத்தடுப்பு செய்திருந்தனர்.
இந்நாள் அணித்தலைவர் பிரணவன் இவர்கள் வெல்லுவார்களா என்ற எண்ணத்துடன்
இந்நாள் அணியின் கீப்பர் சிம்பு
இந்நாள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெகன்
அடுத்து 182 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி முன்னாள் வீரர்கள் சார்பாக முருகவேலும், செந்திலும் களமிறங்கினர். முதலாவது ஓவரில் நான்காவது பவுண்டரிக்கு விளாசிய முருகவேல் இரண்டாவது ஓவரில் முதலாவது பந்திலேயே இளம்புயல் ஜிவிந்தனின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான செந்திலும் மறுமுனையில் அதிரடியாக ஒரு சிக்சர், பௌண்டரி பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட் வெறி கொண்ட இந்நாள் வீரர் மதன்
அதிரடி வீரர் ரவி
பின்னர் களம்புகுந்த பிரபுவும் நிலைக்கவில்லை. அடுத்து களமிறங்கிய சூட்டா ரன் எடுக்காவிட்டாலும் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் நீண்ட நேரம் நிலைத்து 30 பந்துகள் கடத்தியிருந்தார். அடுத்து வந்த வினோபாவும் அதேபாணியில் சிறிது நேரம் தாக்குபிடித்திருந்தார்.
முன்னாள் அணி வீரர் முருகவேல் நடுவராக
முன்னாள் அணியின் தூண் குணநாதன்
முன்னாள் அணி வீரர் கிட்டு
முன்னாள் வீரர் டைசன்
.பின்னர் அடுத்த வந்த சகலதுறை அதிரடி ஆட்டக்காரரான கிருஷ்ணமேனனும் சோபிக்கவில்லை. அடுத்து வந்த குணநாதனும் எதிர்பாராவிதமாக ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இறுதியில் கிட்டுவும், சிறியும் ஓரளவு நேரம் தாக்குபிடித்திருந்தனர். இறுதியில் 19வது ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 57 ஓட்டங்களை பெற்று 125 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கடந்த வருடம் 3 போட்டி தொடராக நடைபெற்ற முன்னாள், இந்நாள் வீரர்களுக்கிடையிலான போட்டியில் முன்னாள் வீரர்கள் 2:1 என்று தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கத்து. அடுத்த வார இறுதியிலும் இன்னுமோர் போட்டி நடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.