நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு நிகழ்வான பிச்சாடணமூர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுகின்றது.
வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவத்திற்கு முதல் நாளான இன்று, பிச்சாடண மூர்த்தியாக எழுந்தருளி பகதர்கள் தரிசிப்பதற்காக நெடியகாடு பிள்ளையார் கோவில் நோக்கி செல்வதை கீழே படங்களில் காணலாம்.
வரலாறு
தருகா வனத்தில் முனிவர்கள் மெய்ப்பொருளாகிய சிவபெருமானை மறந்து யாக கீர்த்தியமே மோட்ச சாதனம் ஆகுமென எண்ணி தினமும் வேள்வி புரிந்து கொண்டு இருந்தனர். இதனை உணர்ந்த பசுபதியாகிய பரமனார் தடுத்தாட்கொள்ள விரும்பினார்.
எனவே இறைவனின் விருப்பத்தின் பேரில் விஷ்ணு மாய மோகினி உருவம் கொண்டும், சிவபெருமான் அரவு, சூலம், கபாலயம், தாங்கி பிச்சாடண மூர்த்தியாக தருகா வனத்தை சென்றடைந்தனர். முனிவர்கள் பெண்ணிற் சிறந்த மோகினியை கண்டு வியப்புற்று மதிமயங்கி மணங்கொள்ள மோகங்கொண்டு பின்தொடர்ந்து சென்றனர்.
சிவபெருமான் கரத்திற் கொண்ட தலையோட்டில் பிச்சைபெற்று முனிவர் போன்று தெருவில் சென்று கானம் பாடிய திருக்கோலத்தை கண்ட தருகா வனத்துப்பெண்கள் தம் உள்ளத்தைப் சிவபெருமானினது வடிவிற்காக பறிகொடுத்து காமவலையிற் சிக்கித்தவித்தனர்.
தம்மை போன்று தம் மனைவியாரும் பிச்சை பெறும் பிச்சாடணனை தொடர்ந்து செல்வதை கண்ட முனிவர்கள் குழாம் அவர்களை வசைமொழி கூறியழைத்தனர். முனிவர்கள் தம் பெருமானை விட்டு பிரிய மனமில்லாது பின்பற்றினார்.
பின் இறைவன் அருளினால் தம்மில்லம் சேர்க்கபட்டனர். அப்போது பிச்சாடணராக வந்தவர் பெருமானே என உணர்ந்து தங்கள் அட்டூழியங்களை நினைந்து வருந்தி பரம்பொருளை வணங்கி அவரது கருணையை பெற்று திருந்தி வாழத்தொடங்கினர். இதுவே பிச்சாடண மூர்த்தியின் வரலாறாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.