வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2026 (வியாழக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் நண்பகல் நடைபெற்றது. காலை 5.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து, தேர் வீதியுலா நண்பகல் 8 மணியளவில் இடம்பெற்றது.
உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், பலர் அங்கப் பிரதற்சனை மற்றும் அடி கழித்தளிலில் ஈடுபட்டனர்.
வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா நாளையும், அதனைத் தொடர்ந்து நாளை இரவு ''இந்திர விழா'' சிறப்பாக இடம்பெற ஆயுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.