வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2026 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. காலை 7 மணியளவில் அம்பாள் தீர்த்தம் ஆடுவதற்காக ஊரணி தீர்த்தக் கடற்கரை சென்றார்.
தீர்த்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊரணி தீர்த்தக் கடற்கரையில் நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் வழமைபோல் நெடியகாடு இளைஞர்களால் வானில் புகைக் குண்டுகள் விடப்பட்டன.
வருடாந்த மகோற்சவத்தைச் சிறப்பிக்கும் ''இந்திர விழா'' இன்று இரவு இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.