அண்மையில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவின் Baltimore பகுதியில் வசிக்கும் மாணவி சரண்யா மதிவண்ணன் MFLA (Maryland Foreign Language Association) இனால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்றமை தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இவர் குறித்த சித்திரப்போட்டியன்றி மேலும் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
தற்பொழுது 15 வயதுடைய செல்வி சரண்யா மதிவண்ணன் மற்றும் மேலதிக தகவல்கள் பின்வருமாறு,
MFLA (Maryland Foreign Language Association) இனால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலிடம்
சித்திரப் போட்டியில் முதலாம் இடம்பெற்றதையடுத்து, இவரின் சித்திர ஆக்கங்கள் MFLA இனுடைய சித்திரம் சம்பந்தப்பட்ட ஆவணப்புத்தகங்களில் இனிவரும் ஒரு வருடத்திற்கு பிரசுமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலிருந்தே சித்திரத்தில் நாட்டம் கொண்டுள்ள இவர் 7 வயதில் வரைந்த ஓவியம் ஒன்று Maryland என்னும் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தனது 7 ஆம் வகுப்பில் இவரும் இவர் நண்பர்களும் கூட்டாக "Robotics competition" ஒன்றில் முதலிடம் பெற்றார்கள்.
மீண்டும் 8 ஆம் வகுப்பில் National Academic League இனுடைய ஒரு வீராங்கனையாக பங்கெடுத்திருந்தார்.
இதுவரை இவர் 21 பாடசாலை விருதுகளைப் (School awards) பெற்றுள்ளார்.
பாடகர் குழு ஒன்றில் இடம்பெற்றுள்ள இவர், பாடசாலை விடுமுறை நாட்களில் நடைபெறும் வைபவங்களில் பாடி வருகின்றார்.
பாடசாலையில் உள்ள NSBE என்னும் அமைப்பின் செய லாளராக தற்பொழுது உள்ளார்.
சுற்றுப்புற சூழல் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார் (Environmental Club, such as Recycling, Reusing)
பூப்ந்தாட்டத்தில் தங்கப் பதக்கத்தை பெற்றுளார்.
பாடகர் குழுவில் சரண்யா - இடமிருந்து 3 ஆவதாக
National Art5 Design competition இல் பங்கு பற்றியதற்கான சான்றிதழ்
Visual Art Competition இல் பங்கு பற்றியதற்கான சான்றிதழ்
செல்வி சரண்யா வரைந்த சில ஓவியங்கள்
Robotics Competition ஒன்றில் தனது நண்பர்களுடன் வென்றதற்காக பெற்ற சான்றிதழ்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Periaththa (sri lanka)
Posted Date: October 23, 2014 at 08:37
May the kind Lord gives you more and more success in all your future endeavours.
Periaththa (sri lanka)
Posted Date: October 23, 2014 at 08:37
May the kind Lord gives you more and more success in all your future endeavours.
SA.PE.RAJKUMAR (CANADA)
Posted Date: October 21, 2014 at 23:54
vazhkavalamudan vazhththukkal! nanry
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.