சர்வதேச நீச்சல் போட்டியில் வல்வைச் சிறுமி தனுஜா 2 பதக்கங்கள் பெற்று சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)
CBSE பாட கற்க நெறிகளை கொண்ட வளைகுடா நாடுகளும் இந்திய நாடும் சேர்ந்து நடாத்திய சர்வதேச நீச்சல் போட்டியில் ஈழச் சிறுமி தனுஐர சாதனை. இந்தியாவின் வட மாநிலமான மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab Emirates ) மற்றும் இந்திய தேசிய அளவிலான 5000 பள்ளிகளுக்கு கடந்த 15.16.17.18 ஆகிய தேதிகளில் இடையேயான போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது)10) சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டிகளில் 11 வயது உட்பட்ட இரண்டு தனி நபர் பிரிவில் பங்கேற்ற தனுஜா 50 மீட்டர் (Butter Fly) நீச்சல் பிரிவில் 36.90 வினாடிகளில் குறித்த துராத்தை கடந்து வெள்ளி பதக்கத்தை தனதாக்கியதுடன் 50 மீட்டர் free style நீச்சல் பிரிவில் குறித்த துராத்தை 34.70 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தினையும் தனதாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மாநில அளவில் 4 போட்டிகளில் 12 பதக்கங்களும் தென் மண்டல 2 போட்டிகளில் பங்கு பற்றி 3 பதக்கங்களும் இந்திய அளவில் பங்குபற்றி 2 பதக்கங்களும் இந்த ஆண்டு இவர் இதுவரை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்வை ரேவடி தனுஜாவின் தந்தை திரு.ஜெயக்குமார் ஒரு சிறந்த கடலோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் (திருச்சியில்) அகதி அந்தஸ்துடன் வாழ்ந்துவரும் விடாமுயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் இந்தசாதனையை நிகழ்த்தியுள்ள தனுஜாவையும் அவரது பெற்றோரையும் இந்தியா வாழ் வல்வை மக்கள் அமைப்பு பாராட்டுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: November 30, 2016 at 09:57
சிறுமி தனுஜா ஜெயகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டி வாழ்த்துவ தோடு அவரின் பெற்றோருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்,
Images of Valvai>
ஊரிக்காடு, வல்வெட்டித்துறைஇ
பத்துவயது மாத்திரமே நிரம்பி பாலகியாக இருந்தாலும்கூட மிகவும் துணிச்சலுடன் சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு இரு பதக்கங்களை வென்று வல்வை மண்னுக்கு பெருமை சேர்த்த செல்வி தனுஜா ஜெயக்குமாருக்கு வாழ்த்துக்கள்.
.
எதிர்வரும் காலங்களில் மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை அள்ளிக்குவித்து வல்வை மண்னுக்கும் பிறந்த பொண்நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டுமென வாழ்த்துகிறன்.
.
தமது அன்புமகளுக்கு ஊக்கமளித்து பயிற்சியும் கொடுத்து தமது பிள்ளையை பேர் சொல்லும் பிள்ளையாக மாற்றிய அன்புப்பெற்றோர்களாகிய ஜெயக்குமார் தம்பதிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.பத்துவயது மாத்திரமே நிரம்பி பாலகியாக இருந்தாலும்கூட மிகவும் துணிச்சலுடன் சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு இரு பதக்கங்களை வென்று வல்வை மண்னுக்கு பெருமை சேர்த்த செல்வி தனுஜா ஜெயக்குமாருக்கு வாழ்த்துக்கள்.
.
எதிர்வரும் காலங்களில் மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை அள்ளிக்குவித்து வல்வை மண்னுக்கும் பிறந்த பொண்நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டுமென வாழ்த்துகிறன்.
.
தமது அன்புமகளுக்கு ஊக்கமளித்து பயிற்சியும் கொடுத்து தமது பிள்ளையை பேர் சொல்லும் பிள்ளையாக மாற்றிய அன்புப்பெற்றோர்களாகிய ஜெயக்குமார் தம்பதிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.