கொராண யாலகெல சே பூங்காவில் சே தினம் - CHE DAY 2014 அனுஸ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2014 (புதன்கிழமை)
கியூபாவின் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க முதலாளித்துவ அடக்கு முறையிலிருந்து விடுவிக்க போராடிய புரட்ட்சியாளர் எர்னஸ்டோ சே குவேரா ( Ernesto "Che" Guevara ) அவர்களின் நினைவாக இலங்கை கொராண யாலகெல பகுதியிலுள்ள சே பூங்காவில் இன்று மாலை ௦8 10 2014 பூங்காவில் சே தினம் (CHE DAY 2014) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை சோஷலிச இளைஞர் சங்கம் (Socialist Youth Union) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கியூபா தூதுவர் திருமதி இந்திரா லோபேஸ் (Mrs.Indira Lopez ) அவர்களும் விருந்தினர்களாக ஜே.வி.பி யின் முக்கிய தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்விற்கு சே குவேரா ஆதரவாளர்களும் ஜே.வி.பி யினரும் பொதுமக்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.
ஐக்கிய அமெரிக்காவால் 55 ஆண்டுகளாக கியூபா இற்கு எதிராக போடப்பட்டுள்ள உலகில் நீண்ட பொருளாதார மற்றும் ஏனைய தடையை நீக்கவேண்டும் என, உலகின் அதியுயர் சபையான ஐக்கிய நாடுகள் சபையின் அநேக நாடுகள் கடந்த 22 வருடங்களாக வலியுறுத்திய வண்ணமுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவால் கியூபா இற்கு எதிராக போடப்பட்டுள்ள பொருளாதார தடையை நீக்கக் கோரியும், அமெரிக்காவின் மியாமி சிறையில் உள்ள கியூப புரட்சியாளர்களான ஜெரார்டோ ஹெர்னாண்டஸ் (Gerardo Hernández), அந்தோனியோ குர்றேரோ (Antonio Guerrero), ராமோன் லபனினோ (Ramón Labañino) பெர்னாண்டோ கொன்ஸாலஸ் (Fernando González) மற்றும் ரேனே கொன்ஸாலஸ் (René González) ஆகிய ஐவரின் விடுதலையைக் கோரியும் சோஷலிச இளைஞர் சங்கத்தால் தீர்மானமும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் சி. ஐ.ஏ இனாலும் கியூபா எதிர்ப்பு மாபியாக்களினாலும் மேற்கொள்ளப்படும் கியூபாவிற்கு எதிரான யுத்த ரீதியான பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தவும், உலகிலுள்ள கியூபா ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் யோசணை முன்வைக்கப்பட்டது.
நிகழ்வில் சே குவேரா பற்றிய பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியிடப்பட்டதுடன் , கியூபா போராளிகளின் விடுதலையை கோரிய இசை நாடகமும் சே குவேரா நினைவுப் பாடல்களும் இசைக்கப்பட்டன. அத்துடன் கியூபா தூதுவர் திருமதி இந்திரா லோபேஸ் அவர்களின் இரண்டு வருட சேவையினை பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
ஆர்ஜென்ரீனாவில் பிறந்து கியூபா புரட்சிக்கு போராடிய கொரில்லாப் போராளி எர்னஸ்டோ சே குவேரா ( Ernesto "Che" Guevara ) அவர்கள் இன்றைய தினம் 08 October 1967 பொலிவியாவில் வைத்து கைது செய்யப்பட்டு 09 October 1967 அன்று பொலிவிய இராணுவத்தாலும் சி. ஐ.ஏ இனாலும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.