10 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்புவிழா மற்றும் கலை நிகழ்வுகள் இனிதே நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்", அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 03:00 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினர், ஆலயக் குருக்கள், கட்டடக் கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்வில், தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான மங்கள இசை, முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம், வில்லுப்பாட்டு, மெல்லிசை, கரக உடுக்குப் பாடல், பஜனை பாடல்கள், பக்திப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், வில்லிசை, நாடகம் - "கனிக்கு வாதாடிய ஆதிசிவன் மைந்தன்", ஒயிலாட்டம், வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 'இன்னும் என்ன சொல்ல' நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
மேலும் மதியபோசன உபசாரமும் நிகழ்விற்கு வருகை தந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட கல்யாண மண்டப வேலைகள் (கட்டட வேலைகள்) சுமார் 10 மாதங்களில் கட்டப்பட்டுள்ளது இங்கு சிறப்புடன் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இன்னும் சில சிறிய வேலைகள் தொடர்ந்து இடம் பெறவுள்ளதாக தர்மகர்த்தா சபை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
சம்பந்தப்பட்ட கல்யாண மண்டப திறப்பு விழா நிகழ்வுகளின் முழுப் புகைப் படங்களின் தொகுப்பையும் எமது Event Photos இல் பார்வையிடலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.