வாசகர்கள் அனைவருக்கும் valvettithurai.org இன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2013 (சனிக்கிழமை)
எமது இணையத்தளத்தின் அபிமான வாசகர்களுக்கு valvettithurai.org இன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி திருநாள் ஜப்பசி மாதத் தேய்பிறைத் திரயோதசி இரவில் சதுர்த்தசியும் கூடி வருகின்ற தினமே ஆகும்.
திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபம்' என்றால் ஒளி, விளக்கு 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
நரகாசுரன் என்ற தீயவனை வதம் செய்த போது அவன் தனது தவறுகளை உணர்ந்து அந்தநாளை மக்கள் மகிழ்ச்சியாக தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என வரம் கேட்டுப் பெற்ற இந்த நாளில் மற்றைய பண்டிகைகள் போலவே ஆரியம், திராவிடம், மேலைத்தேயம், கீழத்தேயம் என்ற வேறுபாடுகள் மறந்து அமைதியாக, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல், மனங்களை புண்படுத்தாமல் நாம் அழிக்கவேண்டிய, தண்டிக்கவேண்டிய, நரகாசுரர்களை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியான பொழுதாக கழிக்க முயற்சிப்போம்.
இந்த நாள் துவண்டுபோயிருக்கும் எம் உறவுகளின் வாழ்வில் நல்ல ஒளி ஏற்றும் நாளாக அமையட்டும்!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.