இதுவரை வல்வெட்டித்துறை ஊரணி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வந்த Dr.மயிலேறும் பெருமாள் அவர்கள் யாழ் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணிக்கு இடமாற்றம் செயப்பட்டுள்ளார். இவரின் இடத்துக்குப் புதிதாக Dr.கலைச்செல்வி தீலிபன் மற்றும் Dr.முரளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மிக நீண்ட காலமாக வல்வெட்டித்துறை ஊரணி ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றி வந்திருந்த Dr.மயிலேறும் பெருமாள் அவர்கள், கடந்த 4 வருட சேவைக்காலத்தை விட மேலதிக காலத்தை ஒப்பந்த அடிப்படையில் பணியினைத் தொடந்திருந்தார்.
மயிலேறும் பெருமாள் அவர்கள் மிக நீண்ட காலமாக இங்கு ஊரணி ஆதார வைத்தியசாலையிலேயே சேவையாற்றி வந்ததது சிலரால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், ஊரணி வைத்தியசாலையின் தற்போதைய வளர்ச்சிக்கு இவர் காட்டியிருந்த முயற்சியை எவராலும் புறந்தள்ள முடியாது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.