இன்று காலை 09.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 51 நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தனர். இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வில் இன்று வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டித்துறையை அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது. வல்வையில் மழை பெய்து கொண்டிருந்த போதும் இரத்ததான முகாம் நண்பகல் 12.30 மணிவரை நீடித்திருந்தது.
இந்த வருடத்தில் மூன்று முறை இரத்ததான முகாம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வதி இலவச ஆங்கில பாடசாலையினால் வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கத்திற்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்று வழங்கப்பட்டது.
பார்வதி இலவச ஆங்கில பாடசாலையினால் வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கத்திற்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்று வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.