வல்வையில் உள்ள ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயமான சென் செபாஸ்தியர் தேவாலய சீர்திருத்த வேலைகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், கனடாவில் உள்ள மொன்றியல் வல்வை மக்கள் சங்கம் தமது பங்களிப்பாக ரூபாய் 132,900.00 த்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகத்தினருக்கு நேரடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு வேலைகளுக்கு, இவர்கள் அனுப்பி வைத்த இந்த நிதி தங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என சென் செபாஸ்தியர் தேவாலய நிர்வாகத்தினர் தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு கனடா (மொன்ற்ரியல்) வல்வை மக்கள் சங்கத்துக்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முன், இந்த தேவாலய புனரமைப்புக்கு அவுஸ்திரேலியா, லண்டன் நலன் புரிச்சங்கங்களின் பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட நலன்விரும்பிகள் பலரின் பங்களிப்பு என ரூபாய் 15 லட்சம் அளவில் தேவாலயத்துக்கு கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தேவாலய புனரமைப்பு சம்பந்தமான தொடர்புகளுக்கு;
திரு.செ.அ.இரத்தினசிங்கம் (அன்ரன்)
00 -94 - 775045873
17.12.2013 அன்று எடுக்கப்பட வல்வை சென் செபாஸ்தியர் தேவாலயத்தின் படம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.