வட மாகாணத்தில் எயிட்ஸ் (AIDS) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலியல் நோய் மற்றும் HIV தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் குறிப்பிட்டார்.
அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றென வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியினால், உரிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முழுமையான விழப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.