செல்வச் சந்நிதியானுக்கு அண்மையில் கிறிஸ்தவ சபை மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)
வரலாற்று சிறப்பிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையாக கிறிஸ்தவ சபை ஒன்றினால் அமைக்க்ப்படும் கட்டிடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மேற்படி கட்டிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டபோதே அதனை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்யுமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.
அத்துடன் வலி.கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலும் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையாக அனுமதி பெற்றுக் கொள்ளாது மதத்தைப் பரப்பும் நோக்கோடு கட்டடம் ஒன்று அமைவதாகவும் அது தொடர்பில் சபை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜங்கரன் கேட்டிருந்தார். ""சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான இந்த செயற்பாடு தடுக்கப்பட வேண்டும் எனவும் கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதா?என்பதன் ஊடாக அதனை அணுகுவது சிறந்தது எனவும் வலி.கிழக்கு பிரதேச சபையின் அப்போதைய தவிசாளர் நிரோஷ் சபைக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த கிறிஸ்தவ சபையினால் கட்டடம் அமைக்கும் பணி நிறைவு பெற்று வருகின்றது. அந்த பிரதேசத்தில் வாழும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் குழப்பமின்றி வாழ்வதிற்கு அந்த இடத்தில் கட்டடத்தை அமைப்பதற்குத் தடுக்குமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் கேட்டிருந்தது.
எந்தவொரு தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று செல்வச் சந்நிதி நிர்வாகம் தனது விசனத்தை வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களாக மதமாற்ற அமைப்புக்கள் தொடர்பில் பல்வேறு குழப்பமான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட தர்ப்புகள் இந்த விடயத்தில் உரிய கரினை கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.(Page tamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.