Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வெட்டித்துறை பற்றிய எனது சிந்தனைகள் - கலாநிதி சபா இராஜேந்திரன்

பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)

வல்வெட்டித்துறை பற்றிய எனது சிந்தனைகள் - கலாநிதி சபா இராஜேந்திரன்

2005ம் ஆண்டு மார்கழி மாதம் ஊருக்குச் சென்றிருந்த நான் சுமார் ஆறு வருட இடைவெளியின் பின்பு 2011 ஆவணி மாதம் சென்றிருந்தேன். இந்த இடைவெளியில் பல விரும்பத்தகாத விடயங்கள் நடைபெற்றிருந்தன. பல இழப்புக்களுக்கும் கஸ்டங்களுக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் ஓரளவிற்குச் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர். மற்றைய ஊர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது ஊர் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தபடியால் துரிதமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கி நின்றது. இந்த நிலையில் ஊர் சென்ற நான் கடந்த 16 மாதங்களில் கணிசமான நாட்கள் ஊரில் வசித்தேன். இந்த நாட்களில் நான் அவதானித்தவற்றையும் வருங்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று நான் நினைப்பதையும் ஊரிலும் வெளியிலும் வாழும் வல்வை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இதை எழுதுகிறேன். ஊரினுடைய வளர்ச்சிக்காகச் சிந்திக்கும், பாடுபடும் மற்றைய வல்வையினருக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன். நிச்சயமாக எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டாது. ஆகவே எனது கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றவர்களும் இருப்பார்கள். மாறாக வேறு கருத்துக் கொண்டபவர்களும் இருப்பார்கள். எல்லோருடைய கருத்துக்களையும் அறிய ஆவலாயுள்ளேன். கூடியவரை எல்லாக் கருத்துக்களையும் இணைத்து நாமெல்லோரும் இணைந்து செயலாற்றினால் வல்வை ஒரு உன்னதமான ஸ்தானத்தை அடையுமென்பதில் சிறிதளவேனும் சந்தேகமில்லை.

வல்வையின் தற்போதைய நிலை.

வெளிப்பார்வையில் ஊர் மிகவும் அமைதியானதாகத்தான் தென்படுகிறது. சிறுசிறு சச்சரவுகளைத் தவிரப் பெரிய அசம்பாவிதங்கள் ஒன்றும் நடைபெறுவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதான திருட்டுக்கள் இல்லை. இளம்பெண்கள் அதிகாலை, அஸ்தமன நேரங்கள் உட்படத் தனியாக சயிக்கிளில் தொந்தரவேதுமின்றிச் சென்று வருகிறார்கள். குடித்துவிட்டுத் தெருவில் நின்று தகாத வார்த்தைகளால் சத்தம் போட்டுக்கொண்டு திரிபவர்களைக் காணமுடியாதிருக்கிறது. வெள்ளாப்பிலும் இரவு நேரங்களிலும் தனியாகத் தெருவில் நடந்து செல்வதற்கு எனக்குப் பயமோ அன்றி வேறு ஏதும் தடுமாற்றமோ கிடையாது. ( ஒன்றைத்தவிர: தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் நாய்களின் எண்ணிக்கை   மிக அதிகமாக உள்ளது. அவற்றின் தொந்தரவுடன் அவை போடும் எச்சங்களை மிதியாமல் நடப்பது சிரமமாக உள்ளது). கோவில்களில் பூசைகள், திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முன்பிருந்ததை விட இப்போது கோவில்களுக்கு அதிகமான பேர்கள் செல்கிறார்கள். வருடத்தில் பல நாட்களில் அசைவம் சாப்பிடாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமைதியாக இருந்தபோதிலும், ஏதோ ஒன்று மனதைச் சங்கடப்படுத்துகிறது. யாருடன் பேசினாலும் எதோ ஒன்றைப்பற்றிக் குறைப்பட்டுப் பேசுவது தெரிகிறது. மனம்விட்டுப் பேசுவதில் ஒரு தயக்கம் காணப்படுகிறது.

வல்வை மக்களில் அன்று காணப்பட்ட சக்தியின் அளவு (energy level) குறைந்து காணப்படுகிறது. அமைதியாக இருக்கும் ஒரு குளம் போல இருக்கிறது. ஒரு ஆற்றின் சக்தி இங்கே காணப்படவில்லை. ஆனாலும் சிறுசிறு குழுக்களாகச் (உம்: கழகங்கள்) செயலாற்றும்போது சக்தி வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊர் முழுவதும் ஒன்றுபட்டு சக்தியை வெளிப்படுத்துவதை (இந்திர விழாவைத் தவிர்த்து)க் காணமுடியவில்லை.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்கள் தமது சொல் கேட்டு நடப்பதில்லையென்றும் மரியாதைக் குறைவாகவும் செயல்படுவதாயும் குறைப்படுகிறார்கள். ஆனால் நான் இதுவரை சந்தித்த மாணவர்களையும் இளைஞர்களையும் ( ஒரு கணிசமான தொகையினரைச் சந்தித்துள்ளேன்) பார்க்கும்போது, மிகுந்த மரியாதையுடன் செயல்படுவதாகவே தெரிகிறது. நட்பு ரீதியில் பழகக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் ஆசிரியர்களும் பெற்றோர்கள் கூறுவதில் ஒரு உண்மை இருக்கிறது. மாணவர்களிடையே மனத்தை ஒருமிகப்படுத்திச் செயலாற்றும் (concentration power)  தன்மை குறைவாகக் காணப்படுகிறது. இதனால் அவர்களுக்குச் சொல்லப்படும் விடயங்களைக் கிரகிப்பது குறைவாக உள்ளது. படிப்பின் மேல் ஆர்வம் குறைகிறது. ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் கெட்ட பெயர் வாங்குகிறார்கள்.

படிப்பு என்பது ஏதோ ஒரு கஸ்டமான விடயமென்றும், அது தங்களுக்கு ஓடாதென்றதுமாதிரியான ஒரு பிரம்மையில் உள்ளார்கள். படிப்பில் நன்றாகச் செய்யவேண்டுமென்ற ஆர்வமிருந்தபோதிலும், ஏற்கனவே தாங்கள் தோற்றுவிட்டோமென்ற முடிவிற்கு வந்துவிட்டபவர்கள் போலவே அநேகமான மாணவர்கள் காணப்படுகிறார்கள். தங்கள் மீதே நம்பிக்கை அற்றவர்களாகத் தெரிகிறது. இந்த நிலைமையை மாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும். ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூக நலன் விரும்பிகளும் திட்டமிட்டுச் செயலாற்றினால்  மிக விரைவிலேயே சாதகமான நிலைமையை உருவாக்கலாம். நான் சிறுவனாக இருந்தபோது இருந்த வசதிகளை விட மிக அதிகமான வசதிகள் இப்போது உள்ளன. வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்களினதும், வல்வையனிரதும் பங்களிப்புகள் இதற்கு முக்கிய காரணம். படிப்பைப் பொறுத்தவரை இவை தொடர்ந்தும் வரக்கூடிய சாத்தியக்கூறே இருப்பதால் திட்டமிட்டுச் செயலாற்றக் கூடியதாக இருக்கும்.

எனது செயல்பாடுகள்

விளையாட்டு

 உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்ததுமாதிரி, எனது குடும்பம் ஒன்றுசேர்ந்து வல்வை விளையாட்டு அரங்கம் (எட்வேட் தங்கவடிவெல் அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தம்) ஏழு மாத முயற்சியின் பின் அமைத்து 15-4-2012 அன்று திறக்கப்பட்டது. இந்த மாதிரியான செயற்கைப்புல்லுடன், சுற்றிவர வலையினால் மூடப்பட்ட இந்த Futsal ( 5-நபர் கொண்ட உதைபந்தாட்டம்) விளையாட்டுத்திடல் இலங்கையிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டது. ஊரிலுள்ள அநேகமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு திறப்பு விழாவைச் சிறப்பாக நடத்தியது சந்தோஷமாக இருந்தது. தங்களின் சக்தியை வெளிப்படுத்தி ஒன்றாக இணைந்து செயலாற்றியது மனதிற்குத் தெம்பை அளித்தது. ஆனால் இப்போது சில மாதங்களின் பின்பு அந்த ஆர்வத்தைக் காணமுடியவில்லை. அநேகமான நேரங்களில் விளையாட்டுத்திடல் வெறுமையாகக் காணப்படுகிறது. Volleyball Court  அமைத்துத் தருமாறு சில மாதங்களுக்கு முன்னர் கேட்டார்கள். அப்படியே செய்தேன். இதிலும் ஆரம்பத்தில் காட்டிய ஆர்வத்தைக் காணமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக Badminton Court  உம் அமைத்துக் கொடுத்துள்ளேன். சில பையன்கள் மாத்திரமே விளையாடுகிறார்கள்.

வல்வை இளைஞர்களுக்கு விளையாட்டில் தம்மை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற எண்ணம் குறைவாகவே இருக்கிறது. Matches  விளையாடுவதில் மாத்திரமே விருப்பத்துடன் இருக்கிறார்களேயொழிய பயிற்சியில் ஈடுபடவேண்டுமென முனைவதில்லை. இதற்கான காரணம் ஓரளவு புரிகிறது. இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களும் முழுநேர வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அல்லது Tuition வகுப்பு என்று அலைந்து திரிகிறார்கள்.  எப்படி விளையாட்டில் ஆர்வத்தைக் கூட்டலாமென்று வல்வை விளையாட்டுக் கழகத்தினருடனும், மூத்த விளையாட்டு வீரர்களுடனும் ஆலோசித்தோம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்டக் குழுக்களை  மின்னொளியில் விளையாட அழைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. அதன்போல கடந்த மூன்று சனிக்கிழமைகளில் போட்டிகள் நடைபெற்றன. பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் கூடுவது தெரிகிறது. அத்துடன் 16 வயதிற்குட்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்ந்து செயல்படும்போது விளையாட்டுத்தரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

படிப்பு

முன்பு குறிப்பிட்டதுபோல படிப்பில் நன்றாகச் செய்யவேண்டுமென்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருப்பது தெரிகிறது. பணம் செலவழித்துப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை tuition வகுப்புக்களுக்கு அனுப்புகிறார்கள். மாணவர்களும் அப்படியே சென்று வருகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய முயற்சிகள் அதற்கேற்ற பலனைத் தருவதாகத் தெரியவில்லை.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்று நான் நினைக்கிறேனென்றால் மாணவர்கள் தாமாகவே ஒரு இடத்தில் இருந்து தாம் பாடசாலையிலும், பாட வகுப்புக்களிலும் படித்ததைத் திருப்பிப் படிப்பதாகத் தெரியவில்லை. அதற்கேற்ற சூழ்நிலையைப் பலவீடுகளில் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. உற்றார் உறவினரின் உரையாடல்கள், TV ஆகியன தானாகவே படிப்பதற்குத் (self study) தடையாக உள்ளது.

இதை மனதில் வைத்துக்கொண்டு எனது மனைவியின் வீட்டைத்திருத்தி, lights, fans, tables, chairs ஆகியனவற்றை உள்ளடக்கி ஒரு  கல்விக்கூடம் (Study Centre)  அமைத்துள்ளேன். ஒரு மாதத்திற்கு மேலாகச் செயல்படுகிறது. சுமார் 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். ஆரம்பத்தில் தாமாகவே படிப்பதற்குச் சிரமப்பட்ட மாணவர்களில் பலத்த முன்னேற்றம் காணப்படுகிறது. வருபவர்களில் பெரும்பாலானோர் இம்மாதம் 11ம் திகதி தொடங்குகின்ற GCE(OL) பரீட்சைக்குத் தோன்றுகிறார்கள். கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் கணிதப்பட்டறை, விஞ்ஞானப்பட்டறை ஆகியன் நடத்தப்பட்டன. நோர்வேயில் வசிக்கும் வெற்றிவேல், லண்டனிலுள்ள சாரதா அருணாசலமும், நண்பர்களும், இராஜன் பழனிவேலும், Captain சிவனேசனும் மாணவர்களுக்கான உணவு வழங்கும் செலவுகளைச் செய்துள்ளார்கள்.  பட்டறை நடத்துவதற்கு விஸ்வரூபன், சுஜீவன், விமல்ராஜ், சிறீ மாஸ்ரர் ஆகியோர் உதவி புரிகிறார்கள்.

இங்குள்ள மாணவர்கள் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மிகவும் தரம் குறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். முக்கியமாகக் கணிதத்தில் தரம் குறைந்தவர்கள் தங்களுக்குப் படிப்பு ஓடாதென்ற மாதிரியான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கணிதத்தரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தும் வண்ணமாகக் கணிதவட்டம் (Maths Circle) ஒன்று ஆரம்பிக்கவுள்ளேன்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில், ஆங்கிலத்தை அதிகளவில் கேட்பதற்கும், பேசுவதற்கும் சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினாலேயே ஆங்கிலத்தரம் மிக மோசமாக இருப்பதாக நினைக்கிறேன். ஆகவே வாரத்தில் 3, 4 நாட்களுக்கு ஆங்கிலம் யாராவது வாசிக்கும்போது கேட்பதற்கும், அதையொட்டிப் பேசுவதற்கும் வாய்ப்பளிக்கும் முகமாக English reading and speaking sessions  ஒழுங்கு செய்யவுள்ளேன்.

மற்றும் உடனடித் தேவைகள்

Board Games

மாணவர்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. ஆகவே Scrabble, Sudokku, Chess போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் clubs களை உருவாக்க யோசித்துள்ளேன். இவற்றை முன்னுக்கு நின்று நடத்தக்கூடியவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

உள்ளரங்குகள் (Indoor Halls)

அம்மன்கோவில் தேவஸ்தானத்தால் ஒரு கல்யாணமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஊரவர் பலரும் பலகாலமாகக் கட்டவேண்டுமென்ற ஆசையுடன் இருந்த் கல்யாணமண்டபம் விரைவில் கட்டிமுடிந்தவுடன் திருமணங்கள் நடத்துவதில் இடச்சிக்கல் இருக்காது.

பலவிதமான காரியங்களைச் செய்யக்கூடியதான Multi-Purpose Hall  ஒன்றும் கட்டவேண்டிய தேவையுள்ளது. அசைவச்சாப்பாடு சாப்பிடக்கூடியதான functions (wedding reception உட்பட) நடத்தக்கூடியதாயும் badminton, table tennis (முடிந்தால் volleyball) ஆகிய உள்ளரங்கு விளையாட்டுக்களை விளையாடக்கூடியதாயும், சமையல் , தையல் ,சங்கீதம், பரதநாட்டியம், நாடகம் ஆகியவற்றைப் பழக்கிக் கொடுக்கக்கூடியதாயுமான உள்ளரங்கு ஒன்றும் ஊருக்குத் தேவைப்படுகிறது.

நெற்கொழு விளையாட்டு மைதானம்.

ஏற்கனவே valvettithurai.org யில் இந்த மைதானம் பற்றிய விபரங்கள் வந்துள்ளன. மிக அழகான மைதானம். நான் இளைஞனாக இருந்தபோது விளையாடும்போது இருந்ததைவிட இப்போது பெரிதாகவும், அழகாகவும் உள்ளது. இப்படியான மைதானம் யாழ்குடாநாட்டில் சிலவே உள்ளன. இப்போது நகரசபை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுக்கக்கூடியதாக Court order  இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நகரசபைக்குச் சொந்தமாக இந்த மைதானத்தை எடுக்கவேண்டும். பின்னொரு காலத்தில் வசதி வரும்போது stadium  ஆகக் கட்டலாம். ஆனால் காணியை வாங்கும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பின்னொரு காலத்திலும் ஒரு தரமுள்ள stadium  அமைப்பதற்கு முடியாமல் போய்விடும்.

துடிப்புள்ள உலகம் மெச்சும் வல்வையை உருவாக்குவதற்கு வல்வையராகிய நாம் முயற்சிக்காவிட்டால் எங்களுக்காக வேறு யாரும் முயற்சிக்கப் போவதில்லை.

இந்த முயற்சி தேவைதானா இல்லையா என்பதை வல்வையில் வாழும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். “மாறுவதற்கு விருப்பமில்லை. இப்படியே இருப்பதுதான் எமக்கு விருப்பம்” என்று சொன்னால் மேற்படி முயற்சியில் இறங்குவதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

இதற்கு எனக்குப் பதிலில்லை.

ஒரு விடயத்தை வற்புறுத்தி இக்கட்டுரையை முடிக்கிறேன். எமது ஊர்ச் சிறுவர்கள் திறமையில் (talent) உலகத்திலுள்ள சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் சராசரிக்கும் அதிகளவில் மேலாகவே இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திறமைகள் வெளிக்கொணரப்படாமலே போய்விடுகின்றன. திட்டமிட்டுச் செயலாற்றினால் திறமைகளைச் செம்மைப்படுத்தி இவர்களை ஒரு உன்னதமான இடத்திற்குக் கொண்டுவரலாம்.

இந்த விடயங்கள் பற்றி என்னுடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் asrajendran@hotmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது skype (sabarajendran) இல் தொடர்பு கொள்ளலாம்.


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Aug - 2039>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai