வல்வை நகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் திரு.குலநாயகம்
முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கடந்த 27.12.2013 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில், நான்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
இத்தீர்மானத்தை எதிர்த்து, மேற்படி கூட்டத்திற்கு பிரசன்னமாக முடியாத உறுப்பினர்களின் ஐவரின் சார்பில் தமிழரசுக்கட்சியயின் நிர்வாகச் செயலாளரும், உறுப்பினருமான திரு.சூ.சே.குலநாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவரது முறைப்பாட்டின்படி, கடந்த 27.12.2013 அன்று வல்வெட்டித்துறையின் நகரசபையின் அமர்வு நடைபெற்றபோது, தான் உட்பட ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கு சபைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கும், பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தமையால், தமது பிரசன்னமின்றி 2014 ஆம் ஆண்டு;ககான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராக 1996 ஆம்
ஆண்டு, 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 (சி) யின் பிரகாரம்,
முறைப்பாடு செய்யப்பட்டடுள்ளதாக தெரியவருகின்றது.
மேற்படி வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே குறிப்பிட்டபடி நான்கு உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த நிலையில் தவிசாளர் திரு ந.அனந்தராஜ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.கனகராஜா ஜெயராஜா அவர்கள் முன்மொழிய, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு.பொன்னுத்துரை தெய்வேந்திரம் அவர்கள் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.