தொண்டைமானாற்றில் பூங்கா அமைக்க நலன்விரும்பி ஒருவர் காணி தரமுன் வந்துள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2014 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாற்றில் சின்னக் கடற்கரையில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு நலன்விரும்பி ஒருவர் காணி ஒன்று தரமுன்வந்துள்ளார்.
குறித்த நலன்விரும்பி அவுஸ்திரேலியாவில் இருந்து இது தொடர்பாக எம்மை தொடர்புகொண்டிருந்தார். வல்வை நகரசபையானது, சம்பந்தப்பட்ட காணியை சிறுவர் பூங்கா அமைக்க உத்தரவாதம் அளித்தால், காணியை பொதுப் பூங்காவிற்கென வல்வை நகரசபைக்கு தமது உறவினர்கள் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய நாம் வல்வை நகரசபைத் தலைவரைத் தொடர்புகொண்டு, காணி மற்றும் அதன் உரிமையாளர் பற்றித் தெரிவித்திருந்தோம். அவரும் சாதகமான பதிலைத் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த நலன்விரும்பி சிறுவர் பூங்கா அமைப்பது தொடர்பான உத்தரவாதம் ஒன்று நகரசபைத் தரப்பில் இருந்து கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார். இது சம்பந்தமாகவும் நகரசபைத் தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
கீழே படத்தில் காணப்படுவதே குறித்த காணியாகும். மிகவும் அழகான சூழலில் தொண்டைமானாற்றின் சின்னக் கடற்கரைக்கு பக்கமாக தொண்டைமானாற்று நீரேரி வங்காள விரிகுடாவுடன் கலக்கும் பகுதிக்குப் பக்கமாகவுள்ளது இந்தக்காணி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
karan (srilanka)
Posted Date: January 18, 2014 at 14:48
காணியை அன்பளிப்பு செய்த நலன்விரும்பிக்கு நன்றி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.