வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ரேவடி மைதான திருத்த வேலைகள் தற்பொழுது பூர்த்தியடைந்துள்ளது.
குறித்த கடற்கரை மைதானப்பகுதி கடந்த வருடம் இராணுவத்தினரால் பொது மக்கள் பாவனைக்கு விடப்பட்டதிலிருந்து, மிகவும் பாவனைக்கற்ற பகுதியாக இருந்த இப்பகுதி, சிரமதானப்பணியாக அப்பகுதி மக்களால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அங்கு சிறுவர்கள் விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
மேலும் அடுத்த கட்டமாக குறித்த பகுதியை ஒளியீட்டும் முகமாக மின் கம்பம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தின் பக்கமாக அமைந்துள்ள காணி சில மாதங்கள் முன்பு இலங்கைச் சுங்கத்தினால், இலங்கைச் சுங்கத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டு பெயர்ப் பலகையும் நாட்டப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.