இன்று சீனர்களின் புதுவருட தினமாகும். சீனர்களின் சீனா, தாய்வான் மற்றும் சீனர்கள் அதிகமாக வாழும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனிசியா போன்ற கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
சீனாவிற்குள்ளேயே பிரதேசத்திற்கு பிரதேசம் சிற்சில வேறுபட்ட புதுவருட தின வழக்கங்களை சீனர்கள் பொதுவாகக் கொண்டிருந்தாலும், “Gong Xi Fa Chi” எனப் பொதுவாக எல்லோராலும் வாழ்த்துக்கூறப்பட்டு அனுஷ்டிக்கப்படும் இப்புதுவருடதினத்திற்கு முந்திய இரவில் எல்லா சீனர்களும் இயன்றவரை தத்தமது வீடுகளில் கூடுகின்றனர்.
இதனால் உலக ஏற்றுமதியில் அதிலும் குறிப்பாக கடல் வாணிபத்தில் முன்னணியில் நிற்கும் சீனாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஒரு சில வாரங்களுக்கு மந்தமடைவதுடன், குறிப்பிடக்கூடிய கப்பல்கள் அதிலும் குறிப்பாக கொள்கலன்கப்பல்கள் தமது பயணங்களை சில வாரங்கள் நிறுத்துவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ வழி கோலுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.