குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympic) போட்டிகள் ரஷ்யாவின் கருங்கடல் கரையோரப் பெரும் நகரமான சொச்சி (Sochi) எனும் இடத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
40,000 ற்கும் அதிகமான பார்வையாளர்கள் சூழ பெரும் வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமான முதல் நாள் நிகழ்வில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கி மூன் (Ban Ki Moon) உட்பட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பனிக் கட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் யாவும் எதிர்வரும்
23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன
உலகின் 80 நாடுகள் பங்குபெறும் இந்த 22 ஆவது ஒலிம்பிக் போட்டியானது, இதுவரை நடைபெற்ற போட்டிகளை விட அதிகளவு செலவில், அதாவது £31Billion (ஸ்ட்ரேலிங் பவுண்டுகள்) செலவில் ரஷ்யாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் Sochi நகரம், டென்னிஸ் வீராங்கனையான (Maria Sarapova) மரியா சரப்போவாவின் சொந்த ஊர் ஆகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.