இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3 ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம்..., அலுவலக உதவியாளர்......போன்ற அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 01.02.2014 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2014 (வியாழக்கிழமை)
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3 ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சங்கீதம் (கீழைத்தேய), நடனம், சித்திரமும் சிற்பக்கலையும், நாடகமும் அரங்கியலும், ஆரம்பக் கல்வி, தகவல் தொழிநுட்பம், தொழிநுட்பவியல், வர்த்தகம், வெளிநாட்டு மொழிகள், அலுவலக உதவியாளர்......போன்றவற்றிகான தினகரன், தினக்குரல் ஆகியவற்றில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (01.02.2014)
2014.02.02 அன்று வெளி வந்த தினகரன்
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு
கல்வித்தகைமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து விஞ்ஞானம்/ விவசாயம்/ பெருந்தோட்ட முகாமைத்துவத்தில் பெறப்பட்ட பட்டதாரிப்பட்டம்.
சம்பளம்:- MA 4/2006 ரூ (18230 – 10 x 365 – 15 x 450 – 5 x 550 – 31380)
விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.02.17
================================
2014.02.03 அன்று வெளி வந்த தினகரன்
வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சு -இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3
வடமத்திய மாகாண சபைப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சங்கீதம் (கீழைத்தேய), நடனம், சித்திரமும் சிற்பக்கலையும், நாடகமும் அரங்கியலும், ஆரம்பக் கல்வி, தகவல் தொழிநுட்பம், தொழிநுட்பவியல், வர்த்தகம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் ஏனைய பாடங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றன.
01.விஞ்ஞான, கணிதப்பிரிவு பாடம்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் உயிரியல், பௌதீகவியல், அல்லது அதற்குச் சமனான வேறுபாடங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுடன் கூடிய விசேட அல்லது சாதாரண பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
02. அழகியல் பிரிவுப் பாடங்கள்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சங்கீதம்(கீழைத்தேய), நடனம், சித்திரமும் சிற்பக்கலையும், நாடகமும் அரங்கியலும், அல்லது அதற்கு சமனான வேறுபாடங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுடன், கூடிய விசேட அல்லது சாதாரண பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
03.தகவல் தொழிநுட்பம் மற்றும் தொழிநுட்பவியல்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் தகவல் தொழிநுட்பம் மற்றும் தொழிநுட்பவியல் பாடங்களுக்கு விசேட அல்லது சாதாரண பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
04. ஆங்கிலம்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலமொழி மூலம் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அல்லது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் ஆங்கில மொழியை ஒரு பாடமாக கொண்ட விசேட பட்டம் அல்லது சாதாரண பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
05. வர்த்தக பாடங்கள்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வர்த்தகம் அல்லது அதற்கு சமனான வேறு பாடங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுடன் கூடிய விசேட அல்லது சாதாரண சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
06. வெளிநாட்டு மொழிகள்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வெளிநாட்டு மொழிகளில் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
07.ஆரம்பக்கல்வி மற்றும் ஏனையவை
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் ஏதாவது ஒரு பாடத்துறையில் பட்டம் பெற்றிரு;தல் வேண்டும்.
சம்பளம் :- நிர்வாகச் சுற்றறிக்கை
6/2006 (iv) 14135 – 9 x 180 – 6 x 240 – 5 x 330 – 7 x 400 – 13 x 645 – 30030
விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.02.21
==========================================
2014.02.06 அன்று வெளி வந்த தினக்குரல்
சுண்ணாகம் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்
01.அலுவலக உதவியாளர்
கல்வித் தகைமை:-
கூட்டுறவு பணியாளர் 17 வது சம்பளத்திட்டப் பதவி ஒன்றில் ஒரு வருடத்துக்கு குறையாத அனுபவத்துடன் 5ம் வகுப்பு சான்றிதழ் அல்லது 8 ம் வகுப்பு சான்றிதழ்
சம்பளம்:- 9200 – 70 x 10 – 75 x 10 – 10650
02. காவலாளி
கல்வித் தகைமை:-
கூட்டுறவு பணியாளர் 17 வது சம்பளத்திட்டப் பதவி ஒன்றில் ஒரு வருடத்துக்கு குறையாத அனுபவத்துடன் 5ம் வகுப்பு சான்றிதழ் அல்லது 8 ம் வகுப்பு சான்றிதழ்
சம்பளம்:- 9200 – 70 x 10 – 75 x 10 – 10650
03.விற்பனை உதவியாளர்
கல்வித் தகைமை:-
கூட்டுறவு பணியாளர் கனிஷ்ட பிரிவுச் சான்றிதழ் அல்லது 8ம் வகுப்புச் சித்தியுடன் விற்பனை அலுவலர் தொடர்பாக 3 வருட அனுபவம்.
சம்பளம்:- 8950 – 65 x 10 – 70 x 10 – 10300
04. சாரதி
கல்வித் தகைமை:-
5ம் வகுப்பு சான்றிதழ்களுடன் பஸ்/ லொறி இழுவைப்பெட்டியுடன் டிறாக்டர், செலுத்துவதற்குரிய சாரதி அனுமதிப் பத்திரத்துடன் 2 வருட அனுபவம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.