சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் புதிய நிர்வாகசபை தெரிவு, வலயக் கல்விப்பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் புதிய நிர்வாக சபை தெரிவுக் கூட்டம் இன்று திட்டமிட்டபடி நடைபெற்றிருந்தது. இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத்திற்கு வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரும் திரு.நந்தகுமாரும் கலந்து கொண்டிருந்தார்.
புதிய நிர்வாகசபை அங்கத்தவர்களின் விபரம் வருமாறு
தலைவர் - ப.சிறிபதி (ஓய்வு பெற்ற கணக்காளர்)
உப தலைவர்கள் – இ. அமர சேனாதிபதி, ச.சின்னத்தம்பு
செயலாளர் - கு.சந்திரகுமார்
உப செயலாளர் - மு.ரவீந்திரன்
பொருளாளர் - சி.தங்கேஸ்வர ராஜா
உறுப்பினர்கள்
மு.தங்கவேல்
Dr.சி.சோதிமயம்
சி.பரமசிவம்
தி.சித்திரைவேல்
க.பாலசிங்கம்
ம.சுந்தரதேவன்
பொ.சிவஞானசுந்தரம்
ப.சரோஜினிதேவி
காப்பாளர்கள்
க.ராஜதுரை (அதிபர்)
Prof.சபா ராஜேந்திரன்
Dr.மயிலேறும் பெருமாள்
இன்றைய கூட்டத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களும் சமுகம் அளித்திருந்தார். திரு. சிவாஜிலிங்கம் சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த நிர்வாகசபை தெரிவுக் கூட்டத்தில், பாடசாலை அதிபரே பழைய மாணவர் சங்கத் தலைவராக இருக்க வேண்டும் என்ற ஒரு சுற்று நிருபத்திற்கமைய, பழைய மாணவர் சங்க தலைவராகத் பாடசாலை அதிபர் திரு.க.இராயதுரை அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தில் கடந்த வருடத்திற்கான கணக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.