தொழில் பயிற்சி அதிகாரசபையின் (Vocation Training Authority) உதவிப் பணிப்பாளர் திரு.இரா.அகிலன் அவர்களின் ஏற்பாட்டில், வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) இணைந்து கடந்து 3 நாட்களாக “துணிகளில் அச்சிடும் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை” (Manual Textile Screen Printing work shop) ஒன்றை வல்வையில் நடாத்தியிருந்தன.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில் சுமார் 50 பெண்கள் வரை கலந்து கொண்டிருந்தனர். ஆனாலும் சுமார் 90 வரையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக வைஷ்வா மற்றும் வெடா தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் உட்பட்ட இருவரினால் அளிக்கப்பட்டிருந்த இந்த பயிற்சியின் மூலம், பயிற்சி பெற்றவர்கள் சுமார் ரூபா 10,000/- மூலதனத்துடன் ஒரு சிறு வீட்டுக் கைத்தொழிலை தொடங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு “Participant Certificate” தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படவுள்ளது.
திரு.மணிவாசகர் நிதியுதவி
மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்புக்களுக்கு பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சிறு தொகைப் பணம் அறவிடப்பட்டிருந்த போதும், பயிற்சிப்பட்டறைக்குரிய நிதியுதவியை வல்வையைச் சேர்ந்த தற்பொழுது மலேஷியாவில் வசிக்கும் திரு.மணிவாசகர் அவர்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.