முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது என இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால், இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்திய மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முருகனின் மனைவி நளினியின் தூக்குத் தண்டனை ஏற்கனவே சோனியா காந்தியின் தலையீட்டினால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.