வடமாகாணசபை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமைச்சருடன் வடமாணசபை உறுப்பினர்களான திரு.M.K.சிவாஜிலிங்கம், திரு.சிவஜோகன் மற்றும் வடமாகாணசபை சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் திரு.ரவீந்திரன், வடமாகாணசபை சுகாதாரத் துறை அமைச்சின் பணிப்பாளர் திருமதி ஜூட், யாழ் மாவட்ட சுகாதாரத்துறைப் பணிப்பாளர் Dr.கேதீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
வைத்தியசாலை தரப்பில் வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் ஊரணி வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
X-ray உபகரணங்கள் வழங்க உறுதி
அமைச்சரின் தனது விஜயத்தின் போது அமைச்சர், ஊரணி வைத்தியசாலையில் ஏற்கனவே X-ray வசதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதிக்கு X-ray உபகரணங்கள் வழங்க உறுதியளித்துள்ளார்.
மேலும் தற்பொழுது வைத்தியசாலையின் பிரதான பகுதியாக விளங்கும் நோயாளர்களைப் பார்வையிடும் பகுதியை, மாடிக்கட்டடத் தொகுதியாக அமைத்துத்தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊரணி விஜயத்த்தின் போது மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, கரவெட்டி பிரதேச வைத்தியசாலை மற்றும் வரணி ஆதார வைத்தியசாலைகளுக்கும் அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.