சந்தைப் பாதுகாவலர்......போன்ற அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 01.03.2014 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2014 (புதன்கிழமை)
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) சந்தைப் பாதுகாவலர், பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளம் மற்றும் முகாமைத்துவம்), பிரதிப் பொது முகாமையாளர் (இயந்திர கூடம்/ இயக்குதல்), மின்சாரப் பொறியியலாளர் (முகாமைத்துவ சேவைத் தரம் MM1-1) சிவில் பொறியியலாளர் (முகாமைச் சேவைத் தரம்)......போன்றவற்றிகான வர்த்தமானி, தினகரன், தினக்குரல் ஆகியவற்றில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (01.03.2014)
2014.02.23 அன்று வெளி வந்த தினகுரல்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புதல் – 2013
சந்தைப் பாதுகாவலர்
கல்வித்தகைமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ்/ சிங்களம் உள்ளடங்கலாக குறைந்தது 6 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 11730 – 10 x 120 – 10 x 130 – 10 x 145 – 12 x 160 – 1760
அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு - இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட் – புல்மூடை
1. பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளம் மற்றும் முகாமைத்துவம்)
கல்வித்தகைமை:-
அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் மனிதவள முகாமைத்துவத் துறையில் முதல்தர பட்டப்படிப்புடன் குறிப்பிட்ட துறையில் முதுமானிப் பட்டம் பெற்றிருத்தல். அல்லது குறிப்பிட்ட பாடநெறித்துறைக்கு பொருத்தமான அங்கீகரிக்கப்பட்ட பட்டயம் பெற்ற தொழில் நிறுவனம் சம்பந்தமான அங்கத்துவம் பெற்றிருத்தல். மற்றும் அரச/ அரச கூட்டுத்தாபன சபையின் நியதிகள் நிறுவனம் ஒன்றில்/ அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ தரத்திலான பதவியொன்றில் 15 வருட அனுபவம்.
ஆ) குறிப்பிட்ட விடயப்பிரிவிற்குப் பொருத்தமான அங்கீகரிக்கப்பட்ட பட்டயம் பெற்ற தொழில் நிறுவனம் ஒன்றில் முழுமையான அங்கத்துவம் பெற்றிருத்தல். மற்றும் அரச/ அரச கூட்டுத்தாபன சபையின் நியதிகள் நிறுவனம் ஒன்றில்/ அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ தரத்திலான பதவியொன்றில் 15 வருட அனுபவம்.
சம்பளம்:- HM 1 – 3 ரூபா 41745 – 15 x 1100 - 58245
2. பிரதிப் பொது முகாமையாளர் (இயந்திர கூடம்/ இயக்குதல்)
கல்வித்தகைமை:-
இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தில் பட்டயம் பெற்ற பொறியியலாளராக இருத்தல். மற்றும் அரச/ அரச கூட்டுத்தாபன சபையின் நியதிகள் நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ பதவியொன்றில் 18 வருட அனுபவத்துடன் சிறந்த சேவைத்தர அறிக்கையொன்றைப் பெற்றிருத்தல்.
சம்பளம்:-HM 1 – 3 ரூபா 41745 – 15 x 1100 - 58245
3. மின்சாரப் பொறியியலாளர் (முகாமைத்துவ சேவைத் தரம் MM1-1)
கல்வித்தகைமை:-
அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கொண்ட பொறியியல் (மின்சாரம்) பட்டதாரிப் பட்டம். மற்றும் பட்டம் பெற்ற பின் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நியதிகள் சபை/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 10 வருட அனுபவம்.
ஆ) மின்சார வேலைகள் சம்பந்தமான முதல்தர மற்றும் தொழில் கல்வி ஆணையாளர் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற தொழிநுட்ப/ தொழில் பயிற்சி நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட (NVQ) 7ம் தரத்திற்கு குறையாத தரச் சான்றிதழ். மேலும் தகுதி பெற்ற பின்னர் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நிறைவேற்றதிகார சபைகளில்/ அங்கீகரிக்ப்பட்ட நிறுவனம் ஒன்றில் குறிப்பிட்ட துறையில் 1 வருட அனுபவம்.
சம்பளம்:- MM 11 ரூபா 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 929 - 4655
4. சிவில் பொறியியலாளர் (முகாமைச் சேவைத் தரம்)
கல்வித்தகைமை:-
அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கொண்ட பொறியியல்(சிவில்) பட்டதாரிச் சான்றிதழ். மற்றும் பட்டம் பெற்ற பின் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நியதிகள் சபை/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 10 வருட சேவை அனுபவம்.
ஆ) சிவில் நிர்வாகம் சம்பந்தமான முதல்தர மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிநுட்ப/ தொழில் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட (NVQ) 7ம் தரத்திற்கு குறையாத தரச் சான்றிதழ். மற்றும் பட்டம் பெற்ற பின் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நியதிகள் சபை/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 10 வருட சேவை அனுபவம்.
சம்பளம்:- MM 11 ரூபா 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 929 - 4655
விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.03.10
===============================================
2014.02.23 அன்று வெளி வந்த தினகரன்
தெங்கு அபிவிருத்தி மற்றும் தோட்டங்கள் அபிவிருத்தி அமைச்சு
பணிப்பாளர் பதவி (பதனிடல் அபிவிருத்தி சிரேஷ்ட முகாமைத்துவ மட்டம்)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து தூய/ பிரயோக விஞ்ஞானம்/ உயிரியில்/ விவசாயம் ஆகிய துறைகளில் பெறப்பட்ட முதலாவது பட்டதாரிப் பட்டம் அத்துடன் இயையான துறையில் பட்டப்பின் பட்டதாரிப் பட்டம் அத்துடன் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் 1ம் தர சம்பளத்திட்டத்துடன் (MM 1-1 2006) இயையான துறையில் மத்திய முகாமைத்துவ மட்டத்தில் 5 வருடத்திற்கு குறையாத திருப்திகரமான சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் IIIஆம் வகுப்பின் விரிவாக்கல் உத்தியோகத்தர் பதவி
கல்வித்தகைமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ்/ சிங்களம் அல்லது இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமைச்சித்தி உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் உயிரியல் விஞ்ஞானம்/ விலங்கியல் விஞ்ஞானம், தாவரவியல் விஞ்ஞானம், விவசாயம், இரசாயன விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் போன்ற பாடங்களில் இரண்டுடன் விஞ்ஞான பாடங்கள் மூன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அரசவளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு - இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட்
பிரதிப் பொது முகாமையாளர் (இயந்திரசாலை/ செயற்பாடுகள்)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்றுள்ள பொறியியல் பட்டம் (BSc/Eng) மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வியாபாரக்கல்வி / நிதித்துறைக்குரிய பட்டம் / பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பெற்றிருத்தல். அல்லது
மேற்படி பட்டப்பின் படிப்பு தகைமைக்கு பதிலாக ஆரம்ப பொறியியல் பட்டத்துடன் CIMA or சமமான தகைமை / CIM சார்பான அங்கத்துவ தகைமை பெற்றிருத்தல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.