வெள்ளம் காரணமாக நேற்றைய தினம் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி தடைப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)
கடந்த சில நாட்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்றைய முன்தினம் தேராவில் இடத்திலுள்ள மூங்கிலாறு மற்றும் மஞ்சள் பாலம் என்னும் இரு ஆறுகளும் பாதையை மூடி ஓடியமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி தடைப்பட்டிருந்தது. இவ்வீதி நேற்று வழமைக்குத் திரும்பியதனைக் காணக்கூடியதாக இருந்தது.
முல்லைத்தீவுக்கு சுற்றுலா வந்த 150 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேற முடியாமல் நேற்றிரவு உடையார்கட்டுப் பகுதியில் தரித்து நின்றிருந்தன . சுற்றுலாப் பயணிகள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி போக முடியாமல் நேற்றைய முன்தினம் வீதியோரங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் வெள்ள நீரானது வீதியை மூடி ஓடுவதனை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.