ஆழிக்குமரன் ஆனந்தன் சாதனைகளின் சொந்தக்காரன்; அது போல வல்வையர் என மார் தட்டிக்கொள்ளும் நாமும் ஓர் சாதனைக்கு சொந்தக்காரர்கள்தான், அதாவது ஊர் பெரியோர்களையும், சாதனையாளர்களையும் சரி அவர்கள் எமக்களித்த பெருமைகளையும் சரி மிக எளிதில் மறப்பதில் எங்களுக்கு நிகர் நாம்தான்.
அந்தவகையில் இலங்கையிலுள்ள தமிழர்களையும் சரி சிங்களவர்களையும் சரி ஏன் உலகையே தனது சாதனைகளின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர், வல்வையரின் பெருமைகளை இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகுக்குமே வெளிகாட்டியவர்.
ஆனந்தன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே அவரைப் பற்றிய நினைவு மீட்டல்கள் அவசியமான நிலையில் இற்றைக்கு 28 வருடங்கள் கழித்து அவர் பற்றிய நினைவுகளையும், அவரது வாழ்க்கை பற்றியும், அவர் புரிந்த வீரதீர சாதனைகளையும் நினைவு கூறுவது மிகவும் அவசியமாகின்றது.
70 தொடக்கம் 90 களில் வல்வையில் ஒரு சில ஆக்கங்களை தவிர அதிகமான ஆக்கங்களும் கலைப் படைப்புக்களும் புத்தகங்களாக அச்சிட்டு வெளிவராத காலங்களில் வல்வையில் கையெழுத்து சஞ்சிகை என்பது மிகவும் பயனுள்ளதானதாக அமைந்தது. அப்போதைய சூழலில் வல்வையிலுள்ள பல படிப்பகங்களில் மிகவும் அதிக வாசகர்களை ஈர்த்தவையும் இவையே.
அந்த வகையில் 1992. 04. 14 ஆம் திகதியில் வல்வை சன சமூக சேவா நிலையத்தினரால் வெளியிடப்பட்ட “அலை ஒளி“ எனும் கையெழுத்து சஞ்சிகையில் ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றிய சிறப்பு இதழில் அவரின் நினைவுகளை நாம், ஆனந்தன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்த ஐந்து வருடங்களிலேயே மறந்தது குறித்தும், அவரின் நினைவாக வல்வையில் ஓர் நினைவுத்தூபி எழுவதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.
சஞ்சிகைகள் மற்றும் இலக்கிய ஆர்வம் குறைந்த எம்மவர்களின் மத்தியில் 1992 இல் வெளிவந்து இன்று வல்வை ஆவணக் காப்பகத்தில் ஆனந்தன் அவர்களின் நினைவாகவும், வல்வையில் வெளிவந்த பல கையெழுத்து சஞ்சிகைளின் சிறு ஆதாரமாகவும் வல்வையிலுள்ள மக்களின் கவனத்தை (பெரிதும்) கவராத “அலை ஒளி” சஞ்சிகையில் சில பக்கங்கள் உங்களுக்காக....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.