இந்தியாவில் பிறந்த சுமார் 17000 இலங்கை குழந்தைகள் உரிய பதிவுகள் இன்றி நாடற்ற நிலையில் உள்ளதாக இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் 'ஹிந்து'செய்தி வெளியிட்டுள்ளது. ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரஹாசன் (Organization for Elam Refugees Rehabilitation - OfERR) இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில் குறித்த பிள்ளைகளை பதிவு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவையை தமிழக அரசாங்கம் நிறுத்தியமையை அடுத்தே இந்த விடயம் சிக்கலுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தேவை. ஆனாலும் பெரும்பாலான பெற்றோருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இல்லை என்றும் சந்திரஹாசன் மேலும் கூறியுள்ளார். இலங்கையின் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு ஒருவரின் பிறப்புச் சான்றிதழ் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது 25 மாவட்டங்களில் உள்ள 110 முகாம்களில் 66000 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர். அத்துடன் சுமார் 35,000 பேர் முகாம்களிற்கு வெளியில் வசித்து வருகின்றனர் எனவும் 'The Hindu' மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
படம் - இராமேஸ்வரம் 'மண்டபம்' அகதிகள் முகாம் வாசல், Photo by Valvettithurai.org
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.