அல்ஜீரிய பயணிகள் விமானம் 116 பேருடன் வடக்கு மாலியில் விபத்து!
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2014 (வெள்ளிக்கிழமை)
ஏர் அல்ஜீரியன்சால் கையாளப்படும் AH5017 பயணிகள் விமானம் Burkina Faso நாட்டின் தலைநகர் Ougadougou இலிருந்து அல்ஜீரியா நாட்டின் தலைநகரான Algiers நோக்கி 110 பயணிகளுடனும் 6 விமான சிப்பந்திகளுடன் பயணித்தவேளை வடக்கு மாலி பகுதிக்கு மேல் பறந்த தருணத்தில் விபத்துக்குளாகியுள்ளது.
மேற்படி விமானம் ஸ்பெயினை சேர்ந்த Swiftair என்ற தனியார் கம்பனிக்கு சொந்தமானகும். இந்த விமானத்தில் 51 பிரெஞ் நாட்டவரும், 27 Burkina Faso நாட்டவர்களும், 8 லெபனான் நாட்டவர்களும், 6 அல்ஜீரியர்களும், 5 கனடியர்களும், 4 ஜேர்மனிய நாட்டவர்களும், 2 லக்ஷம்பேர்க் நாட்டவர்களும் , சுவிஸ், மாலி, பெல்ஜியம், உக்ரேன், எகிப்து, நைஜீரியா, கமரூன் நாட்டை சேர்ந்த தலா ஒவ்வொருவரும் பயணித்துள்ளனர்.
மேற்படி விமானமானது புறப்பட்டு 50 நிமிடங்களின் பின் கடும் மழைப்பொழிவு உள்ள பகுதியான வடக்கு மாலிக்கு மேலாக பயணிக்கும்போது காணாமல் போயுள்ளது. இறுதியாக வியாழக்கிழமை 0130 GMT நேரத்துக்கு நைஜர் விமானக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு கடும் மழைப்பொழிவு பறக்கும் பிரதேசத்தில் இருப்பதால் தனது விமானபாதையை மாற்றுமாறு கேட்டுள்ளது. விமானம் காணாமல் போனதையடுத்து இரு பிரெஞ்ச் போர் விமானங்கள் தேடுதலை நடத்தியுள்ள போதும் இச்செய்தி எழுதப்படும்வரை எதுவுமே கண்டுபிடிக்கபடவில்லை.
விமானம் காணாமல் போன பகுதியில் போராளிக்குழுக்கள் உள்ளபோதும் அங்குள்ள போராளிக்குழுக்களிடம் விமானத்தை சுட்டு விழுத்தும் வல்லமை இல்லை என தெரிய வருகிறது. மேலும் விமானம் காணாமல் போனவுடன் ஏன் உடனடியாக அரசாங்கத்தினாலோ அல்லது விமானநிறுவனத்தாலோ பொதுமக்களுக்கு காணாமற்போனது அறிவிக்கபடவில்லை என்பது குறித்து தெளிவற்றதன்மை நிலவுகிறது.
இதேவேளை 2-3 தினங்களுக்கு முன் பரிசோதனை செய்யப்பட்டபோது விமானம் எதுவித பிழைகளும் இல்லாமல் பறக்ககூடிய நல்ல நிலையில் இருந்ததாக பிரெஞ் விமானங்களை பரிசோதனை செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விமானத்தை தேடுவதற்கு மாலியில் உள்ள அனைத்து இராணுவமும் பயன்படுத்தபடும் என பிரெஞ் அதிபர் Francois Hollande தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் மூன்றாவது விபத்து இதுவாகும். கடந்த வியாழக்கிழமை 296 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தபட்டதும், நேற்று தாய்வானில் அவசர தரையிறக்கமொன்றில் 40க்கு மேற்பட்ட பயணிகள் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.