கனடாவில் இலங்கைத் தமிழழர் வாமதேவனுக்கு அதிா்ஸ்ட குலுக்கலில் 300 கோடி இலங்கை ரூபா கிடைத்துள்ளது!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2014 (புதன்கிழமை)
கனடாவில் மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை (300 கோடி இலங்கை ரூபா) பரிசு வென்றுள்ளார்.
மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும், இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி, தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும், வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களின் பின்னர் அந்த நாளுக்குரிய குலுக்கலில் வெற்றி பெற்றவர் மிசிசாகாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து, தனது பணப் பையில் இருந்த சீட்டு ஒன்றில் இலக்கத்தை ஒப்பிட்டு பார்த்ததாகவும், அந்த இலக்கங்கள் பொருத்தமற்று இருக்கவே வேறு யாரோ ஒரு மிசிசாகா நபர் வென்றுள்ளார் என நினைத்து விட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தர்ப்பவசமாக அலுமாரியில் இருந்த சீட்டு ஒன்றினைக் கண்டதாகவும், அதன் இலக்கங்களை ஒப்பிட்டு பார்த்த போது தன்னாலோ தனது குடும்பத்தினராலோ நம்பவே முடியவில்லை எனவும், வாயில் இருந்து பேச்சே வரவில்லை எனவும் அவர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
தான் கனடாவில் 30 வருடங்களாக வசித்துவரும் நிலையில், தற்போது இவ்வாறு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து தான் மீளவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், பரிசுப் பணத்தினைக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கூட தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
mathy (United Kingdom)
Posted Date: November 08, 2014 at 05:29
Look after your wealth and health, Share it among your kiths and kins. Good luck
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.