லண்டனில் வல்வெட்டித்துறைச் சேர்ந்த 10 வயது சிறுமி சித்திரம் வரைதல் போட்டியில் முதல் நிலையில் தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Borough இல் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளிலிடமிருந்து 3000 பேர் போட்டியிட்டனர். இப்போட்டியில் முதல் இடம் பெற்ற 25 பிள்ளைகளில் சாருஜாவும் ஒருவராகத் தெரிவாகியிருந்தார் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
செல்வி சாருஜா தற்பொழுது லண்டனின் மிற்ச்சம் (Mitcham) பிரதேசத்தில் உள்ள Surrey என்னும் பகுதியில் அமைந்துள்ள Lonesome ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்றுவருகின்றார்.
இவர் பாலசுப்ரமணியம் (தம்பி அண்ணா-மயிலியதனை) கமலவேணிஅம்மா தம்பதியினர், மற்றும் செல்வச்சிவம் இராஜேஸ்வரி தம்பதியினர்களின் பேத்தியாவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
thushi (canada)
Posted Date: November 14, 2014 at 10:28
great job .sweetie i am so proud of you and keep up the good work and keep on getting more awards and all of my wishes are to you. thushi shankar.
Iswaran (UK)
Posted Date: November 06, 2014 at 21:10
Could you publish some of the child's art she drew, so that we also can share the joy?
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.