பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட மாணவர்கள் வல்வைக்கு சுற்றுலா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2013 (திங்கட்கிழமை)
யாழ் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட (Human Resource Management Faculty) இறுதியாண்டு மாணவர்கள் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு தமது குழுவினருடன் விஜயத்தை மேற்கொண்டு வல்வெட்டித்துறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர்.
இதில் வரலாற்றுப் புகழ்பூத்த செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், தொண்டைமானாறு பெரிய கடற்கரை, தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், மண்டபக்கிடங்கு, வல்வை நகரப்பகுதி, வல்வை பொது விளையாட்டரங்கு, மற்றும் பல பகுதிகளுக்கும் சென்றனர்.
வல்வை பொது விளையாட்டரங்கில் மாணவர்களை சபா இராஜேந்திரன் அவர்கள் வரவேற்றதோடு மாணவர்களுக்கு விளையாட்டரங்கின் அமைப்பு பற்றி விளங்கப்படுத்தினார். இந்த சந்தர்ப்பத்தை எமது இணையதளமான valvettithurai.org யினால் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வைக்கு வந்திருந்த மாணவர்கள் அனைவரும் வல்வை நகரின் சிறப்புக்களை அறிவதற்கு இது ஒரு சிறந்த வருகையாக அமைந்திருந்தது. இந் நிகழ்வை வல்வையைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட 3ம் வருட மாணவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 3 ம் வருட நிதியியல் பிரிவு மாணவர்கள் 01/02/2013 அன்று வல்வைக்கு விஜயம் மேற்கொண்டார்கள். இதனுடன் சம்பந்தப்பட்ட செய்தி : http://www.valvettithurai.org/newsdetails.php?id=297
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.