செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழியவிடாது தடுக்க நடவடிக்கை, அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2013 (புதன்கிழமை)
யாழ்ப்பாணத்தின் கலையான செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழிய விடாது பேணும் நோக்குடன் யாழ். மாவட்ட தேசிய அருங்கலைகள் பேரவையால் அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வழிபாட்டுத்தலங்களில் அதிகளவில் செப்புத் தகட்டு புடைப்புச் சித்திர முறைகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனைவிடப் பரிசுப் பொருள்கள் அலங்காரப் பொருள்கள், வெற்றிக் கேடயங்கள் போன்றவற்றிலும் செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த சித்திர ஆக்கங்கள், எழுத்துக்கள், உருவங்களை செப்புத்தகட்டில் பதிவு செய்து வரையப்படும் இந்தச் சித்திரக்கலை தற்போது அருகி வருகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கைத்தொழில் நிலையங்கள் போரினால் அழிவடைந்த நிலையிலுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில் இந்தக் கலையில் ஆர்வமுடையவர்களுக்கு கற்பிக்கும் நோக்குடனும், இந்தக் கலையை நவீன மயப்படுத்தும் நோக்குடனும் புடைப்புச் சித்திரகலை சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்தக் கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.