Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் மின்னொளியில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2013 (சனிக்கிழமை)

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் அறையிறுதியாட்டங்கள் 22/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றன. வல்வையில் பலவருடங்களுக்கு பின்னர் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியைக் காண  வல்வை மற்றும் வெளியூர் ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இப்போட்டியை மேலும் மெருகூட்டியது.

இச்சுற்றுப் போட்டியானது வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் காலநிலை சீரின்மை மற்றும் போட்டி அட்டவணையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிற்போடப்பட்டு வந்தது, இந்நிலையில் இச்சுற்றுப் போட்டியின் அறையிறுதியாட்டங்கள் மற்றும் இறுதியாட்டங்கள் என்பன மின்னொளியில் நடைபெறுமென  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. 
 
22/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற அறையிறுதியாட்டங்களில் முதல் போட்டியில் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து, அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் மோதியது, இப்போட்டியின் முதல் பாதியிலிருந்தே கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது, பிற்பாதியில் அல்வாய் நண்பர்கள் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் கோலினை போட முடியாமல் போகவே கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் 1:0 என்ற கோல்  அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
இரண்டாவதாக நடைபெற்ற  போட்டியில் யாழ்ப்பணத்தில் மிகவும் பலம்வாய்ந்ததாகக் கூறப்படும் இளவாலை யங்கென்ரிக்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்  என்பன மோதிக்கொன்ண்டன. இப்போட்டியின் முதல் 5 நிமிடத்திற்க்குள்  யங்கென்ரிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் நட்சத்திர வீரர் ஞானம் அபாரமாக ஒரு கோலினை போட்டு அணியின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தவே போட்டி மிகவும் விறுவிறுப்பாகியது. இரு அணி வீரர்களும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை எனும் படியாக விளையாடவே போட்டி முடிவில் இளவாலை யங்கென்ரிக்ஸ் விளையாட்டுக்கழகம் 1:0 என்ற கோல்  அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் மற்றும் 3ம் இடத்திற்கான போட்டிகள்  எதிர்வரும் 24/3/2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளன. இச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ஒரு தங்கப் பவுண் பொறிக்கப்பட்ட 6 அடி வெற்றிக் கிண்ணமும், அணிவீரர்களுக்கு 60,000 ரூபா பணப்பரிசும்,  3ம் இடத்தைப் பெறும் அணிக்கு 4அடி வெற்றிக் கிண்ணமும், அணிவீரர்களுக்கு 36,000 ரூபா பணப்பரிசும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் வழங்கப்படவுள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
இளவாலை யன்கென்ரிச் விளையாட்டுக் கழகம்
 
 
 
பாஷையூர் சென் அன்டனீஸ் விளையாட்டுக்கழகம்
 
 
 இறுதியாட்டம் மற்றும் 3ம் இடத்திற்கான போட்டி போடும் அணிவிபரம் வருமாறு,
 
 இறுதியாட்டம் :-  இளவாலை யங்கென்ரிக்ஸ் விளையாட்டுக்கழகம்
                                                                                        எதிர் 
                                     கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம்
 
 3ம் இடத்திற்கான ஆட்டம் :-  அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம்
                                                                                                 எதிர் 
                                           பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Jun - 2014>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்