நிலாம் புயலால் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் இடம்பெயர்வு.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2012 (வியாழக்கிழமை)
இலங்கைக்கு கிழக்காக நிலைகொண்டிருந்த 'நிலாம்' புயல் (Tropical cyclone ) நேற்று மாலை இலங்கைக்கு வடகிழக்காக இந்தியாவை நோக்கி நகர்ந்து சென்னையை கடந்து சென்று வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக வடக்கு கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வந்த கடும் மழை குறைந்து கொண்டுவருவதுடன், புயலினால் உண்டாகக்கூடிய நேரடிப் பாதிப்பு முற்றாக நீங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக நீடிக்கும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கரையோர மாவட்டங்களான திருகோணமலை, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
புயல் காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண் சரிவுகளும், இதனால் மக்கள் இடப்பெயர்வுகளும் உடைமைகள் சேதங்களும் ஏற்ப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புயலின் நேரடி பாதிப்பு முற்றாக விலகியுள்ள போதும் அதன் மறைமுக பாதிப்பு காரணமாக கடும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து எதிபார்க்கபடுகின்றது. காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசும் எனவும் எதிபார்க்கபடுவதுடன், இடைப்பருவப் பெயர்ச்சி காலநிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் மழை காரணமாக வல்வெட்டித்துறையின் நெடியகாட்டு குளம் நிறைந்த காட்சி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.