கொழும்பு – ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத்திணைக்களம் நேற்று முன்தினம் 20ஆம் திகதி முதல் பத்தரமுல்ல சுஹுருபாய கட்டடத் தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக உள்ளக அலுவல்கள் வடமேல்மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.
இருந்தபோதும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஆள் அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகள் ஜாவத்த பிரதான காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. அதனால் அந்த உபகரணங்களை அகற்ற முடியாமல் இருக்கின்றதாக அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைபோன்று ஆரம்பிக்கப்படுவதோடு, புதிய அடையாள அட்டை காரியாலயம் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.