மரண அறிவித்தல் - திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை (தகனக் கிரியை மாற்றம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2016 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை
தோற்றம்: 20.10.1931 மறைவு: 25.09.2016
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பவளக்கொடியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மாவின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் மற்றும் பூரணலக்ஷ்மி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
ரேணுகா, மனோகர், வசந்தா, பிறேம்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீதரன், விஜயலக்ஷ்மி, பவீந்திரன், சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, தாட்ஷா, ரோகினி, சுகந்தன், ராகுலன், பிரவீன், நவீன் மற்றும் வருணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கையற்செல்வம், மாணிக்கவாசகர், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27.09 2016 செவ்வாயன்று பி.ப. 6.30 முதல் 8.30 வரை Guardian Funerals, Cnr Sunnyholt Road and First Avenue, BLACKTOWN 2148 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக் கிரியைகளுக்காக 28.09.16 புதன் அன்று West Chapel, Kington Street, Minchin bury, NSW 2770 ற்கு மதியம் 0130 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் 0330 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: September 29, 2016 at 01:34
அன்று காட்டுவளவில் நான் கண்ட அமைதியான பண்பான மனிதர் இவர்..
ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் படிக்கும்போது இரண்டு பேர் உறுதி கையொப்பமிட வேண்டும்.. எனது படிவத்தில் கையொப்பமிட்டு வாழ்த்தி அனுப்பிய பெருமகனார் இவர். என்றும் மறவேன் இவர் பெருமையை..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.