ஐந்தாண்டுகள் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இணையம் என்பது அன்றாடம் தரவேற்றம் செய்யாவிட்டால் அதன் சிறப்பு குன்றிவிடும்.
அன்று பிறந்த குழந்தையை பராமரிப்பது போல என்றும் பராமரிப்பதுதான் இணையம், இன்று இப்பொழுதுதான் அதன் வயது.
கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் இடையறாது தரவேற்றம் செய்து இனி பத்தாவது வயது நோக்கி புதிய காலடி பதிக்கிறீர்கள்.. மகிழ்ச்சி
தங்கள் இணையம் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு எவ்வாறு செயற்படப்போகிறது, மேலும் என்ன புதிய மாற்றங்களை திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை அறியத்தந்தால் நல்லது அல்லது கருத்துரைக்கும்படி மக்களிடம் கேட்டாலும் நல்லது.
கடந்த காலங்களில்...
01. கோயில் திருவிழாக்களும் அதன் புகைப்படங்களும்..
02. விளையாட்டுக்களும் அதன் தகவல்களும்
03. செத்த வீடுகளும் அதன் அஞ்சலிகளும்
ஆகிய மூன்று விடயங்களை தங்கள் இணையத்தில் அதிகமாக அவதானித்துள்ளேன்.. இதனால் பலருக்கு பயனுண்டு என்பதை மறுக்க முடியாது இது நல்லதோர் சேவையாகும்.
ஆனால்...
தகவல்களின் வீதம் என்ற அடிப்படையில் மற்றைய விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவத்தை நாமே வலிந்து ஏற்படுத்த வேண்டும்.
வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அடுத்து வரும் நாட்களுக்கு புதுமை கொடுங்கள்.
தங்கள் இணையத்தில் நான் எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற தொடரை நூலாக வெளியிட முயற்சிகள் எடுத்து வருகிறேன்.. தங்கள் ஐந்தாண்டு சேவையில் இருந்து வெளிவரும் நூலாக அது அமைகிறது.
மேலும் தங்கள் ஐந்தாண்டு சேவை எனக்கு ஒரு நூலை வெளியிடும் ஊக்கத்தை தந்ததையிட்டு ஆனந்தமடைகிறேன்.
நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும், பரந்த மனப்பான்மையுடன் சிந்தித்து செயற்பட வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.