வல்வைக்கு அடையாளம் தந்த வரலாறே வாழ்க - செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2017 (வியாழக்கிழமை)
வல்வைக்கு அடையாளம் தந்த வரலாறே வாழ்க..! உலகத்தில் புகழ் பெற்ற ஊர் வல்லை என்பார் - ஆனால் வல்வைக்கு பெருமை யாரென்றால் அது அதிரூபசிங்கம் மாஸ்டர்தான்..
இரண்டு நூற்றாண்டுகளில் கால்பதித்து - தளராது தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப்பழம் நாடகக் கலைஞன்.. வல்வை நாடகங்களுக்கு வசனத்தால் வளமிட்டு நடிப்பால் மெருகேற்றி வரைந்த தமிழ் கலை ஓவியம்..
ஒருவனோடு நண்பனாய் வாழமுடியா உலகில் எல்லோருடனும் நண்பனாகி மகிழ்ந்த நட்பின் இலக்கணமே வணக்கம். மாஸ்டர் பேருந்தில் நடத்துனரென்றால் போதும் கண்ணை சிமிட்டிவிட்டு ஏறுவேன் அவர் காசில் போவேன் பயணம்.
அதிரூபசிங்கம் என்று அழகிய பெயரிட்ட உன் தந்தையின் புகழோடு ஆறுதலாய் கண்ணை மூடினாய். உயிர் போனாலும் காரியமில்லை நான் உன்னைப் பார்க்க வேண்டுமென ஓடி வந்தேன் ஊருக்கு. மேள தாளம் முழங்க மாலையிட்டு உன்னை யாழ் நகரில் வீரமகனான அழைத்து சென்றேன் மகிழ்ச்சி.
இரவு படுக்கையில் துடித்து எழுந்தேன் இறந்தது யாரென்று தவித்தேன் வந்தது செய்தி நீயென்று.. வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாய் நின்றாய் கனவிலே வந்து விடையும்பெற்றாய் கனக்குதே இதயம் கண்ணீரில்.
உன் வீடு வந்து தட்டியபோது உன் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையை அருகில் கண்டேன்.
நம்பத்தான் முடியவில்லை அன்பால் கலங்கினேன் அதிரூபசிங்கத்தை அள்ளி அணைத்தேன் அக மகிழ்ந்தாய் அன்று. என்றும் உண்மை வல்வையின் பக்கமாக நின்று குரல் கொடுக்கும் தமிழே பெருமையே வணக்கம்.
கல்விக்கடலே கலைத்தாய் பெற்ற புகழே முத்தமிழ் முரசமே எங்கள் முது தமிழ் கனியே. மாஸ்டர் நீங்கள் இல்லாவிடினும் ஊரில் உங்கள் ஒளி வாழும் சென்று வாருங்கள் மறுபடி. வல்வை மக்களின் அடையாளமே.
யாழ் ராஜா திரையரங்கில் அழைத்து செல்லப்படும் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்
வரலாறே மகத்தான மரியாதைகள் உனக்கு வானம் பூமாரி பொழிகிறது. போனவர் எல்லாம் கூடிநிற்கிறார் உனக்காய் வான மண்டலத்தில் வரவேற்பு விடைதர தயாராகிறது வல்வை.
மகனே கண் கண்ணீரில் உனக்காக..
அந்தக் குழந்தை அழுகிறது வல்வைத்தாய் துடிக்கிறாள்
உனக்காய் மாஸ்டர் வாழ்கிறீர்கள் என்றும் வல்வை மக்கள் மனங்களில் நீங்காது முருகா ஏற்றுக்கொள் இவரை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.