நாடுமுழுவதும் ஒரே தினத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்
ஏற்கனவே 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கான அறிவிப்பு எதிர்வரும் நான்காம் திகதி வெளியாக்கப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக வேட்பு கையேற்புகள் இடம்பெறும் என்றாலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய பெப்ரவரி மாத முதல் வாரம் அளவில் தேர்தல்இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.