Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையூரா நின் பணி துணிவோடு அணிசேர்த்து தொடரட்டும் - நீ.வர்ணன் (Valvettithuraiorg 1 வருடம் பூர்த்தி)

பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)

(Valvettithuraiorg 1 வருடம் பூர்த்தி)

வல்வையூரா நின் பணி துணிவோடு அணிசேர்த்து தொடரட்டும்

அகவை ஒன்றினை கொண்டாடும் www.valvettithurai.org  க்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.ஈழத்து மண்ணின் வடபுலம்பால் அமைந்த எமது வல்வை மண் எத்தனையோ துறைகளுக்கு சிறந்து விளங்கியிருந்தமை யாவருமறிந்த  உண்மை.

இலங்கைக்கு பின்னர் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் இலங்கையை விடவும் பலமடங்கு அபிவிருத்தி அடைந்திருப்பதை போலவே எமக்கு பின்னர் பலதுறைகளில் தடம்பதித்தவர்கள் இன்று அத்துறைகளில் சிறந்து விளங்குவதை காணமுடிகின்றது.

இதன் பின்புலம் ஆராய்கின்றபொழுது நாம் நவீனத்தை எமது துறைகளில் உள்வாங்காமையும் நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதை அறிய முடிகின்றது.அன்னபூரணியை அமெரிக்கா வரை கொண்டு சென்ற நாங்கள் இன்று ஒரு சிறு படகு செய்யக்கூட அண்டை ஊர்களை நாடுவது இதற்கு ஒரு சான்று.

எனினும் இணைய ஊடகம் எனும் நவீனத்தை நாங்கள் தொட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் சொந்த ஊரில் வசிப்பது அரிதான காரியம். ஆனால் அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களுக்கு தன் மண்ணைப்பற்றி தொடர்ச்சியாக அறிவதற்கு உதவியாக இருக்கும் www.valvettithurai.org வலைத்தளத்தின் பணிகள் பாராட்டப்படவேண்டியது அவசியம்.

அண்மைய தசாப்தத்தில் எத்தனையோ இணையத்தளங்கள் தமிழில் தொடங்கப்பட்டமை தமிழர் நடப்புக்களை உலகறிய செய்வதில் பெரும் பங்காற்றியிருந்தது. எனினும் பெரும்பாலான தளங்கள் புலம்பெயர் உறவுகளால் நடாத்தப்பட்டமையினால் இலங்கையின் உள்ளக சூழலை, அன்றாட நிகழ்வுகளை சரியாக வெளிக்கொணர்வதில் இணையத்தளங்கள் பத்திரிகைகளிடம் தோற்றுவிட்டன என்றால் தகும்.

இவ்வாறான காலகட்டத்தில் வல்வை மண்ணை, என் ஊர் நிகழ்வுகளை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த வல்வெட்டித்துறை.org இணையத்தளம் வல்வை நிகழ்வுகளை வெளிக்கொணர்வதில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பது ஆராய்ந்தறியப்பட்ட உண்மை.

ஏனெனில் உள்ளூரில் இருந்துகொண்டு உள்ளூர் நிகழ்வுகளையும் இந்த மண்ணின் சிறப்புக்களையும் செய்திகளையும் வெளிக்கொணரும் ஒரு சில ஊடகங்களில் வல்வையின் இணையத்தளம் ஒன்று ஒரு வருடத்தில் இந்த வளர்ச்சியை அடைந்திருப்பது எம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும்

இன்றைய சந்ததியினுடைய கணணியுக வளர்ச்சி காரணமாக, சைக்கிளை எடுத்துச்சென்று கடையில் பத்திரிகை வாங்கி வந்து படிப்பதை விட வீட்டிற்குள் இருந்துகொண்டு இணைய செய்திகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டப்படுவது பத்திரிகை விற்பனையின் புள்ளிவிபரங்களை எடுத்துப்பார்த்தால் புரியும். தனது பக்கத்து வீட்டு நிகழ்வை கூட சமூக இணையமூடாகவே அறிகின்ற இளம் சந்ததி இப்பொழுது இலங்கையிலும் உருவாகிவிட்டது.

எனவே தக்கன பிழைக்கும் என்ற சார்ள்ஸ் டார்வினுடைய கூர்ப்பு கொள்கைக்கு ஒப்பாக நாம் இந்த இளம் சந்ததியிடத்தில் எமதூர் சிறப்புக்களை எடுத்து செல்ல வேண்டும் என்றால் கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் இணைய ஊடகத்தில் நாம் வெற்றிபெற வேண்டியது அவசியமாகும். எமது வல்வையை எடுத்துக்கொண்டால் கூட சந்திகளில் சைக்கிள்களில் நிற்கும் இளைஞர்களில் எண்ணிக்கை அருகி கணணிமுன் அமர்ந்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கண்கூடான உண்மையாகும்.

இப்படியான ஒரு சூழலிலில் இந்த வல்வெட்டித்துறை.org இணையத்தளத்தை அன்றாட நிகழ்வுகளின் தரவேற்றத்தோடு மிகச்சிறப்பாக நடாத்திவரும் அனைவருக்கும் எனது தனிப்பட்ட பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என் ஊரின் ஒவ்வொரு பாகத்தை பற்றியும் உள்ளூர் நடப்புக்களை பற்றியும் அறிய உதவியாக இருக்கும் இந்த தளம் இன்னும் வாழவேண்டும் வளரவேண்டும் என்பது எனது அவாவாகும். இதன் பின்னணியில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அணியினரை ஊக்குவிக்க வேண்டியது வல்வையில் பிறந்த ஒவ்வொருவரதும் கடமையாகும்.

எமது வல்வையின் இணையததளம் இன்னும் பிரகாசிக்க வேண்டும். இன்றுபோலவே என்றும் அவர்களின் உற்சாகம் தொடரவேண்டும் என்று முகாமைத்துவத்துக்கும் செயலணியினருக்கும் இச்சிறியோனின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். யாம் வல்வையராய் இருப்பதில் பெருமைகொள்வதில் நீவிரும் ஒர் காரணம் நின் பணி துணிவோடு அணிசேர்த்து தொடரட்டும்.

 

நீதிராஜா வர்ணன்
பொறியியல் பீடம், மொறட்டுவை பல்கலைக்கழகம்
நிகழ்சி தொகுப்பாளர், சக்தி தொலைக்காட்சி

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
T. Yogasabapathy (Sri Lanka) Posted Date: October 07, 2013 at 05:38 
அருமையான தமிழ் நடை. விடயச் செறிவான வாழ்த்துச் செய்தி


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கண்ணீர் அஞ்சலி - கப்டன் சின்னத்துரை சிவநேசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2026 (திங்கட்கிழமை)
கப்டன் சிவநேசன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2026 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - மங்களேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு செல்லச்சாமி நாராயணசாமி (செல்லக்கிளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
பாரிய நிலத்தடி நீர் ஊற்று பிட்டபெத்தரயில் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவில்தலும் - அமரர் சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு ரங்கநாதன் லோகநாதன் (பாபு)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
85 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2026 (வியாழக்கிழமை)
​வல்வெட்டித்துறை பெருவிளையாட்டு விழா 2026 - ஸ்பான்சர்ஷிப் பிரிவுகள் & சலுகைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2026 (செவ்வாய்க்கிழமை)
"ஒருபோதும் நான் என் தந்தையின் மகளில்லை" - பாமினி செல்லத்துரை (பாகம் 2)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2026 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - நடராசா மோகனகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2026 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2026 (செவ்வாய்க்கிழமை)
அகன்று செல் - போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2026 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
படகில் இருந்து தவறுதலாக விழுந்தவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
வல்வை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
க.பொ.த உயர் தர (2028) கணித விஞ்ஞான வகுப்பு ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதிக் கிரியகள் பற்றிய விபரம் - திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2026 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர (2028) கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2026 (சனிக்கிழமை)
இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2026 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை பெரு விளையாட்டு விழா - 2026
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2026 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2026 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Feb - 2020>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்